லோக்சபா தேர்தலில் போட்டியிடும் தமாகா வேட்பாளர் பட்டியல் வெளியீடு – யார் யார் எங்கு போட்டி..?

1 Min Read

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் லோக்சபா தேர்தலில் போட்டியிட போகும் வேட்பாளர்களின் பட்டியலை அந்த கட்சியின் தலைவர்கள் ஜி.கே.வாசன் இன்று வெளியிட்டார். அதோடு வேட்பாளர்களையும் அறிமுகம் செய்து வைத்தார்.

- Advertisement -
Ad imageAd image

தற்போது 2024 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி துவங்கி ஜூன் 01 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெற உள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அப்போது மார்ச் 20 ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் துவங்கி நடந்து வருகிறது.

ஜி.கே.வாசன

இதனால் அனைத்து கட்சிகளும் தங்களின் கட்சி சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் குறித்த பட்டியலை வெளியிட்டு வருகின்றன. இந்த வரிசையில் இன்று தமாக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை பட்டியலை ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ளார்.

பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமாகா-விற்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஈரோடு, ஸ்ரீபெரும்புதூர், தூத்துக்குடி ஆகிய தொகுதிகள் தமாகா-விற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தமாகா வேட்பாளர் பட்டியல்:

தமாகா

1. ஈரோடு – விஜயக்குமார்,

2. ஸ்ரீபெரும்புதூர் – வேணுகோபால்,

தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் குறித்த அறிவிப்பை மார்ச் 24 ஆம் தேதி வெளியிட உள்ளதாக ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.

லோக்சபா தேர்தலில் போட்டியிடும் தமாகா வேட்பாளர் பட்டியல் வெளியீடு

மேலும் இந்த தேர்தலில் தமாகா வேட்பாளர்கள் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளராக கனிமொழி அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுக சார்பில் இந்த தொகுதியில் சிவசாமி வேலுமணி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இதனால் தூத்துக்குடி தொகுதியிலும் மும்முனை போட்டி நிலவுகிறது.

Share This Article
Leave a review