விழுப்புரம் மாவட்டத்தில் பாஜக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.விழுப்புரம் மாவட்ட பாஜக மகளிர் அணி சார்பில், அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்க கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பாஜக மகளிர் அணி மற்றும் நிர்வாகிகள் அனைத்து மகளிர்க்கும், மகளிர் உரிமைத்தொகை வழங்காத திமுக அரசியல் மாவட்ட பிஜேபி மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்காததையுகம், மின் கட்டணம், பால் விலை உயர்வை கண்டித்து நடிகை நமீதா கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார்.
விழுப்புரம் மாவட்டத்தில் புதிய பேருந்து நிலையம் அருகில் தமிழக பாஜக மகளிர் அணி சார்பில் திமுக அரசை கண்டித்து கண்ணன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் திரைப்பட நடிகை நமீதா கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்.கடந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுகவின் சார்பில் தமிழகத்தில் உள்ள அனைத்து மகளிர்க்கும் , மகளிர் உரிமைத் தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தேர்தல் வாக்குறுதிகளை முறையாக பின்பற்றாமல் திமுக நிர்வாகிகளுக்கும், அவர்களின் உறவினர்களுக்கு மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. ஏழை எளிய மக்களுக்கு பெரும்பாலும் நிராகரிக்கப்பட்டுள்ளது என குற்றம் சாட்டி கண்டன கோஷங்களை எழுப்பினர். அப்போது பேசிய அவர் தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை எல்லோருக்கும் கிடைப்பதில்லை. தகுதி உள்ளவருக்கு என்று குறிப்பிடும் போது கேஸ் இணைப்பு இருந்தால் கூட உரிமைத்தொகை வழங்குவதில்லை.
அப்போது கேஸ் இணைப்பை ஏற்கனவே மோடி வழங்கி விட்டார். ஆயிரம் ரூபாய் குறிப்பிட்டவர்களுக்கு வழங்குவது தமிழக மக்களுக்கு செய்கிற பச்சை துரோகம். பேருந்தில் மகளிருக்கு இலவசம் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்புக்கு முன்னர் பேருந்தில் பயணம் செய்தால் ஆண், பெண் யாராக இருந்தாலும் ரூபாய் பத்து ரூபாய் கட்டணமாக இருந்தது.

இப்போது பெண்களுக்கு இலவசம் என்று அறிவித்து விட்டு அதே பேருந்தில் பயணம் செய்கிற பெண்ணின் கணவருக்கு ரூபாய் 20 ரூபாய் டிக்கெட்டாக வசூலிப்பது எந்த விதத்தில் நியாயம். இது போன்ற பல்வேறு கட்டண உயர்வுகளை தமிழக அரசு செய்து வருகிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று பேசினார்.கண்டன ஆர்ப்பாட்டத்தில் அப்பகுதியில் காவல்துறை பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.