தேங்காய்க்கு உரிய விலை நிர்ணயம் செய்யவில்லை என்றால் போராட்டம்., கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினர் அறிவிப்பு.!

0
61
தேங்காய் உடைக்கும் காட்சி

தேங்காய்க்கு உரிய விலை நிர்ணயம் செய்யவில்லை என்றால் விவசாய கட்சியினர் அனைவரையும் திரட்டி தலைமைச் செயலகம் முன்பு இடுதேங்காய் உடைத்து போராட்டம் நடைபெறும். பல்லடம் அருகே புத்தரச்சலில் நடைபெற்ற தேங்காய் உடைக்கும் போராட்டத்தில் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினர் அறிவிப்பு .

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே புத்தரச்சல் பகுதியில் 50க்கும் மேற்பட்ட தென்னை விவசாயிகள் தேங்காய் ஒன்று 5 ரூபாய்க்கு
கொள்முதல் செய்ப்படுவதால் வாழ்வாதாரம் பாதிப்பதாக கூறி அதிக விலைக்கு கொள்முதல் செய்ய வேண்டும் எனவும், நியாய விலை கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், 35 ஆண்டுகளாக கள் இறக்க செய்யப்பட்ட தடையை நீக்கி கள் இறக்க அனுமதி வழங்க வேண்டும் எனவும், 106 ரூபாய்க்கு கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது போல் மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்,

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புத்தரச்சல் ஈஸ்வரன் கோவிலிலிருந்தது கைகளில் தேங்காயை ஏந்தியவாறு ஊர்வலமாக நடந்து வந்து பல்லடம் தாராபுரம் சாலையில் சிதறு தேங்காய் உடைத்து போராட்டம் நடத்தினர். மேலும் இது தொடர்பாக விவசாயிகள் கூறுகையில் தேங்காய் கொள்முதல் விலை தமிழக அரசு நிர்ணயம் செய்ய வேண்டும் எனவும் ரேசன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய வேண்டும் எனவும் கள் இறக்க தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும் எனவும் அரசுக்கு பல்வேறு கோரிக்கைகள் வைத்தனர்.

மேலும் தேங்காய் விலை நிர்ணயம் செய்யவில்லை என்றால் அனைத்து கட்சி விவசாயிகளை திரட்டி சென்னை தலைமைச் செயலகம் முன்பு இடுதேங்காய் உடைக்கும் போராட்டம் நடத்தவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here