- தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல்,
2023-24 ஆம் ஆண்டிற்கான விவசாயிகள் பாதிப்பு பற்றிய உண்மைக்கு புறம்பான காப்பீடு இழப்பீட்டிற்கான அரசாணையை ரத்து செய்ய வேண்டும் . மேட்டூர் அணை தண்ணீர் இன்றி 2023 ஆகஸ்ட் 7ஆம் தேதியே மூடப்பட்டதால் சம்பா சாகுபடி முற்றிலும் அழிந்த நிலையில் காப்பீட்டிற்கான இழப்பீட்டை நிபந்தனையின்றி 100%-ம் உடன் வழங்கிட வேண்டும்.
மாவட்ட ஆட்சியர் தலைமையிலான பேரிடர் மேலாண்மை குழு மழையளவை கணக்கில் கொண்டு மகசூல் இழப்பை மறு ஆய்வு செய்து இழப்பீட்டை நிர்ணயம் செய்திட வேண்டும். ஆண்டு தோறும் அறுவடை ஆய்வறிக்கையை மாவட்ட பேரிடர் மேலாண்மை குழு ஒப்புதல் பெற்று மகசூல் இழப்பு இறுதி செய்வதை கட்டாயம் ஆக்கிட வேண்டும்.
முந்தைய மூன்று ஆண்டுகளுக்கான தற்போதைய உத்தேச மகசூல் அளவை 2 மடங்காக உயர்த்தி வழங்கிட வேண்டும். தேசிய வேளாண் காப்பீட்டு நிறுவனத்தின் மூலம் மட்டுமே காப்பீடு செய்வதை கட்டாயமாக்கிட வேண்டும்.
கொஞ்சம் இதையும் படிங்க : https://thenewscollect.com/uncovered-rainwater-drainage-ditches-in-various-areas-around-papanasam/
மாவட்ட தலைநகரங்களில் வேளாண் காப்பீட்டு நிறுவனங்களை நிறுவிடவும், தனி நபர் விளைநிலத்தின் சேதத்தை கணக்கிட்டு முழு காப்பீடு வழங்கிடவும், ஆண்டுதோறும் சுமார் 5000 கோடிக்குமேல் கொள்ளையடிக்கும் வேளாண் காப்பீட்டு நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்திட வேண்டும். போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டுக்கோட்டை அறந்தாங்கி செல்லும் சாலையில் காந்தி சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் நடைபெற்றது.