இந்தியாவை மாற்றி காட்டுவோம் என்று பிரதமர் கூறியது பாடங்களில் பாரதம் என பெயர் மாற்றுவது தானா என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி ?
இந்தியாவை மாற்றி காட்டுவோம் என பிரதமர் கூறியது பாடங்களில் பாரதம் என பெயர் மாற்றுவதைதானா என்று விருதுநகர் திமுக இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். விருதுநகரில் வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் ராமமூர்த்தி ரோட்டில் பிரம்மாண்ட பந்தலில் நேற்று நடைபெற்றது அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன் தங்கம் தென்னரசு தலைமை தாங்கினார்கள்.
மாநில திமுக இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார் அவருக்கு வெள்ளி நினைவு பரிசாக வழங்கப்பட்டது. கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியவாறு:- நமக்கு நீட் விளக்கு என்பதே இலக்காகும் ஒரு கோடி பேரிடம் கையெழுத்து பெற்று இளைஞர் அணி மாநாட்டின் போது முதலமைச்சரிடம் வழங்க உள்ளோம். திமுக இளைஞரணி இரண்டாவது மாநாடு கொள்கைக்காக நடத்தப்படுகிறது.

ராணுவ கட்டுக்கோப்போடு இந்த மாநாடு சேலத்தில் நடத்தப்படும். வாக்குறுதி அளித்தபடி மகளிர் உரிமைத் தொகையை முதலமைச்சர் வழங்கிவிட்டார். ஆனால் பிரதமராக மோடி பதிவேற்றவுடன் ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் ஒரு 15 லட்சம் டெபாசிட் செய்வேன் என்றார் ஆனால் இதுவரை 15 பைசா கூட டெபாசிட் செய்யவில்லை. அவர் எங்கு சென்றாலும் வட மாநிலங்களில் பேசும்போது கூட தமிழக முதலமைச்சர் பற்றியும் என்னை பற்றியும் தான் பேசுகிறார்.
மக்களுக்காக எதையும் செய்யாமல் அவரது நண்பர் ஆராணிக்காக அனைத்தையும் செய்து உள்ளார் எல்லா நிலைகளிலும் ஆதனியை பிரதமமாக கொண்டே செயல்பட்டுள்ளார். பிரதமர் மோடி இந்தியாவை மாற்றி காட்டுவேன் என்றார் ஆனால் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் இந்தியா என்று இருப்பதை பாரதம் என்று மாற்றுகிறார்.

இதுதான் பிரதமர் குறிப்பிட்ட மாற்றமா நாடாளுமன்றத் தேர்தலில் அடிமைகளின் அவர்களது எஜமானர்களின் வென்று தமிழகத்தின் 40 தொகுதிகளிலும் வாகை சூடுவோம். அதற்காக நீங்கள் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும் இவ்வாறு அமைச்ச உதயநிதி ஸ்டாலின் பேசினார்.