பிரதமர் நரேந்திர மோடி, 7 லோக் கல்யாண் சாலையில் சிறுவர்களுடன் இன்று ரக்ஷா பந்தன் கொண்டாடினார்.
பல்வேறு அம்சங்கள் குறித்து தங்களுடன் கலந்துரையாடிய பிரதமருக்கு சிறுவர்கள் ராக்கி கயிறு கட்டினர். சந்திரயான் – 3 திட்டத்தின் வெற்றி குறித்து சிறுவர்கள் தங்கள் நேர்மறையான உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டனர், மேலும் எதிர்வரும் ஆதித்யா எல் – 1 திட்டம் குறித்து தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.

இந்த உரையாடலின் போது சிறுவர்கள் கவிதைகள் வாசித்து பாடல்களைப் பாடினர். இவர்களின் பேச்சால் கவரப்பட்ட பிரதமர், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அரசுத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் கவிதைகள் எழுதுமாறு அவர்களை ஊக்கப்படுத்தினார். தற்சார்பு இந்தியாவின் முக்கியத்துவத்தை விளக்கிய பிரதமர், மேட் இன் இந்தியா தயாரிப்புகளைப் பயன்படுத்துமாறு சிறுவர்களுக்கு அறிவுறுத்தினார்.
இதில், பல்வேறு மாணவ, மாணவியர் தங்கள் ஆசிரியர்களுடன் பங்கேற்றனர். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், பிருந்தாவனத்தைச் சேர்ந்த விதவைகள் மற்றும் பிற நபர்களும் கலந்து கொண்டனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.