அரசுமுறைப் பயணமாக பூடான் சென்றார் பிரதமர் மோடி!

1 Min Read
மோடி

பிரதமர் நரேந்திர மோடி இன்று முதல் இரண்டு நாட்கள் (2024 மார்ச் 22 முதல் 23 வரை) பூடானுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார். இதனையொட்டி இன்று அவர் பாரோ சென்றடைந்தார். இந்தியாவுக்கும் பூடானுக்கும் இடையே வழக்கமான உயர்மட்ட பயணம் மற்றும் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற மத்திய அரசின் நோக்கத்திற்கு ஏற்ப இந்தப் பயணம் அமைந்துள்ளது.

- Advertisement -
Ad imageAd image

பாரோ விமான நிலையத்தில் பூடான் பிரதமர் ஷெரிங் டோப்கே பிரதமரை அன்புடன் வரவேற்றார்.

மோடி

இந்தப் பயணத்தின்போது, பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நம்கியேல் வாங்சுக் மற்றும் இதற்கு முன்பு பூடானின் மன்னராக இருந்த ஜிக்மே சிங்கே வாங்சுக் ஆகியோரை பிரதமர் சந்திக்க உள்ளார். பூடான் பிரதமர் ட்ஷெரிங் டோப்கேவுடனும் பிரதமர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

திம்பு நகரில் இந்திய அரசின் உதவியுடன் கட்டப்பட்டுள்ள அதிநவீன மருத்துவமனையான கியால்ட்சுன் ஜெட்சுன் பெமா தாய் சேய் நல மருத்துவமனையையும் பிரதமர் திறந்து வைக்கவுள்ளார்.

Share This Article
Leave a review