ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை பாதுகாப்பான மு …

1 Min Read
அரிசி

ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை பாதுகாப்பான முறையில் ஏற்பாடு செய்த பிறகு பொது விநியோகத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

- Advertisement -
Ad imageAd image

இதுதொடர்பாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ரேஷனில் செறிவூட்டப்பட்ட அரிசியை எப்படி விதியோகம் செய்கிறீர்கள் என மத்திய அரசிடம் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அதற்கு தலசீமியா, அனீமியாவால் பாதித்தவர்கள் செறிவூட்டப்பட்ட அரிசியை உண்ண வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளதாகவும், அது குறித்த விளம்பரங்கள் கடைகளில் ரேஷன் வைத்துள்ளதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது.

பிரேமலதா விஜயகாந்த்

அப்போது அரிசியை உண்ணக் கூடாதவர்களை எப்படி கண்டறிவீர்கள் என நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அதுவும் ரேஷன் கடை என்றாலே ஏழை மக்கள் அதிகம் அரிசி வாங்கி பயன்படுத்துவது வழக்கம், அதனால் யார் இந்த அரிசியை பயன்படுத்தலாம், பயன்படுத்தக்கூடாது என்பதில் அரசு கவனமாக செயல்பட வேண்டும் என அறிவுறித்திய நீதிமன்றத்திற்கு தேமுதிக சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

எனவே தரம்பிரித்து இந்த அரிசியை யார் உண்ண வேண்டும் என உரிய முறையில் விழிப்புணர்வு செய்து, தெளிவுபடுத்திய பிறகு தான் மக்கள் பயன்பாட்டிற்கு செறிவூட்டப்பட்ட அரிசி கொண்டுவர வேண்டும். அதுவரை பொது விநியோகத்திற்கு தமிழக அரசு இந்த அரிசியை அனுமதி செய்யக்கூடாது” என்று குறிப்பிட்டுள்ளார்.

Share This Article
Leave a review