இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பொங்கல் பண்டிகையானது தமிழர் திருநாளாக நாடு முழுவதும் மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறன. இந்த நிலையில் திருவாரூர் மாவட்ட காவல்துறையில் காவல் குடும்பத்தினர் சார்பாக சமத்துவ பொங்கல் விழாவினை அனைத்து உட்கோட்டங்களில் நடத்த திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc (Agri) அவர்கள் உத்தரவிட்டதன் படி இன்று (13.01.2024) திருவாரூர், நன்னிலம் மற்றும் மன்னார்குடி ஆகிய உட்கோட்டங்களில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.

காவலர்கள் குடும்பத்தின் சார்பாக கொண்டாடப்பட்ட சமத்துவ பொங்கல் விழாவில் பொங்கல் வைத்தும், காவலர்கள் குடும்பத்தை சேர்ந்த சிறுவர்கள், சிறுமிகள் மற்றும் பெரியவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.மேலும் பொதுமக்கள் தங்களிடம் எவ்வளவு வசதி வாய்ப்புகள் பெருகினாலும் பெரும்பாலானவர்கள் தற்போது வரையில் இந்த பொங்கல் பண்டிகையை மண்பானையும்,மண் அடுப்பையும் கொண்டு பழமை மாறாமல் கொண்டாடும் நிலை இருந்து வருகிறனர் என விழாவில் பலரால் பேசப்பட்டது.
நன்னிலம் மற்றும் திருவாரூரில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc (Agri) அவர்கள் கலந்து கொண்டு விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்கள்.
இவ்விழாவில் திருவாரூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.A.சிவராமன் மற்றும் நன்னிலம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.P.தமிழ்மாறன் ஆகியோர் உடனிருந்தார்கள்.

மன்னார்குடியில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவில் மன்னார்குடி காவல் துணை கண்காணிப்பாளர் திரு.A.அஸ்வந் ஆண்டோ ஆரோக்கிக்யராஜ் அவர்கள் கலந்து கொண்டு விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்கள்.
இந்நிலையில் இந்த பண்டிகையினை ஏற்ற இறக்கம் இல்லாமல் அனைவரும் ஒன்று சேர்ந்து சமத்துவ பொங்கலாக கொண்டாட வேண்டும் என கடந்த 2006, 11 திமுக ஆட்சி காலத்தின் போது அப்போதைய முதல்வரான மறைந்த கருணாநிதி மூலம் போடப்பட்ட உத்தரவின் பேரில் இந்த சமத்துவ பொங்கல் விழா இன்று வரையிலும் அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி இந்த பொங்கல் திருநாளானது நடப்பாண்டில் நாளை (15ம் தேதி) கொண்டாடப்படவுள்ள நிலையில் வழக்கம் போல் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் இந்த சமத்துவபொங்கல் விழாவானது கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, திருவாரூர் நகராட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற இந்த சமத்துவ பொங்கல் விழாவை தலைவர் புவனப்பிரியாசெந்தில் துவங்கி வைத்தார். இதில் துணை தலைவர் அகிலாசந்திரசேகர், கமிஷ்னர் மல்லிகா மற்றும் கவுன்சிலர்கள், அலுவலர்கள் கலந்துகொண்டனர்.