- 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள ராஜா மடம் பகுதியில் சாலை ஓரத்தில் நின்று அழுது கொண்டிருந்ததை பார்த்த அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த பெண்ணை பட்டுக்கோட்டை மகளிர் காவல் நிலையம் அழைத்து விசாரணை மேற்கொண்டதில் அவரை மன்னார்குடி முக்குலன்சாத்தனூர் பகுதியைச் சேர்ந்த தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றும் முத்துப்பாண்டியன் வயது 28 மற்றும் அவரது நண்பர் தவசீலன் வயது 27 ஆகிய இருவரும் தன்னை அழைத்து வந்து பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்பட்ட நிலையில் அந்த இரு இளைஞர்களையும் கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்றுமுன்தினம் இரவு முத்துபாண்டியன் சிறுமியின் தந்தைக்கு போன் செய்துள்ளார். அப்போது, அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லை என சிறுமி கூறியிருக்கிறார்.
எங்க கம்பெனிக்கு நேரில் வந்து சொல்லிவிட்டுச் செல்லுமாறு முத்துப்பாண்டியன் சிறுமியை அழைத்துள்ளார். அவரது தந்தையும் பணத்தை கட்டி விடுவதாக போய் சொல்லிட்டு வாம்மானு கூறியுள்ளார். சிறுமியும் பழகிய நபர் தானே அழைக்கிறார்னு நம்பி சென்றுள்ளார். மன்னார்குடிக்கு வந்த சிறுமியை முத்துப்பாண்டியன் தனியாக அழைத்து சென்று, திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். அப்போது அவரது நண்பர் தவசீலன்(25) உடன் இருந்துள்ளார். இதையடுத்து சிறுமியை ஏமாற்றி தவசீலனுடன் சேர்ந்து டூவீலரில் ராஜாமடத்திற்கு அழைத்து சென்றுள்ளார். ராஜாமடம் அக்னி ஆறு பகுதிக்கு சென்ற பிறகு முத்துப்பாண்டியனும், தவசீலனும் சேர்ந்து சிறுமியை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அப்போது இதை வெளியே சொல்லாமல் இருக்க மிரட்டுவதற்காக செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இதைத்தொடர்ந்து சிறுமியை அங்கேயே விட்டுவிட்டு சென்று விட்டனர்.
விசாரணையில் சிறுமி நடந்த இந்த சம்பவத்தை போலீஸில் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட சிறுமி பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளார். அவர் கொடுத்த புகாரின் பேரில் பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து முத்துபாண்டியன், தவசீலன் இருவரையும் கைது செய்தனர். மேலும் விசாரணை தொடந்து வருவதாக தெரிவித்தனர்.