பஞ்சாப் தலைமைக் காவலர் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேரையும் போலீஸார் கைது செய்தனர் .

2 Min Read

பஞ்சாப் தலைமைக் காவலர் தர்ஷன் சிங் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேரையும் பஞ்சாப் போலீஸார் கைது செய்துள்ளனர். இதை டிஜிபி கௌரவ் யாதவ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

- Advertisement -
Ad imageAd image

பர்னாலாவில் காவல்துறை தலைமைக் காவலர் கொல்லப்பட்ட வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பஞ்சாப் காவல்துறை தலைமை இயக்குநர் கௌரவ் யாதவ் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரை துப்பாக்கி சூடு நடத்தி பர்னாலா போலீசார் கைது செய்தனர். கைது செய்ய பட்டவர்களிடம் இருந்து ஒரு கைத்துப்பாக்கி மற்றும் இரண்டு தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கௌரவ் யாதவ் கூறினார்.

டிஜிபி கௌரவ் யாதவ்

பஞ்சாப் காவல்துறையின் தலைமைக் காவலர் தர்ஷன் சிங் ஞாயிற்றுக்கிழமை பில் செலுத்துவதில் ஏற்பட்ட தகராறைத் தீர்ப்பதற்காக இரவு உணவகம் ஒன்றிற்கு சென்று இருந்தார் . அங்கு அவரை குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் கடுமையாக தாக்கினர் இதில் தலைமைக் காவலர் தர்ஷன் கொல்லப்பட்டார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ” ஹெட் கான்ஸ்டபிள் தர்ஷன் சிங் கொலையில் தொடர்புடைய குற்றவாளிகள் 4 பேரையும் பர்னாலா போலீஸ் கைது செய்துள்ளது, இதில் ஒரு சிறுவன் காயமடைந்தார். குற்றம் சாட்டப்பட்டவர்களிடமிருந்து 1 கைத்துப்பாக்கி மற்றும் 2 தோட்டாக்கள் கேட்ரிட்ஜ் மீட்கப்பட்டுள்ளன” டிஜிபி யாதவ் பதிவு செய்துள்ளார் .

குற்றம் சாட்டப்பட்ட நான்கு குற்றவாளிகளும் கபடி வீர்கள் என்றும் , அவர்களுக்கும் உணவகத்தின் உரிமையாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்த சம்பவம் நடந்ததாக முன்னதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகாரிகளின் கூற்றுப்படி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் கட்டணத்தை செலுத்தாமல் தகராறு செய்ததால், உணவக உரிமையாளர் காவல் துறைக்கு தொலைபேசியில் தெரிவித்து உடனடியாக சம்பவ பகுதிக்கு வருமாறு தகவல் கொடுத்துள்ளார் .

தகவலின் பேரில் அங்கு போலீசார் விரைந்து சென்றனர் , தகராறை தீர்க்க சென்ற போலீசார்களின் ஒருவரான தர்ஷன் சிங் அந்த இடத்தை அடைந்தபோது, ​​குற்றம் சாட்டப்பட்டவர்களால் தாக்கப்பட்டதாகவும், தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அவர் பர்னாலா சிவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு தர்ஷன் சிங் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர் .

மேலும் சம்பவம் நடந்ததில் இருந்து 4 குற்றவாளிகளும் தலைமறைவாகியுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் 4 குற்றவாளிகளையும் அவர்களது மறைவிடத்திலிருந்து கைது செய்த போலீசார் . கைது செய்யப்பட்ட குற்றவாளிகளிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் .

Share This Article
Leave a review