பணத்திற்காக இளைஞர்களை கடத்தி காவல் நிலையத்திலேயே அடைத்து வைத்த பகிர் சம்பவம் ஒன்று பாகிஸ்தானில் அரங்கேறியுள்ளது .
பாகிஸ்தான் நாட்டின் ஜகாரியா கோத் பகுதியை சேர்ந்த 2 இளைஞர்களை மர்ம கும்பல் ஒன்று கடத்தி சென்று உள்ளது. அவர்களை விடுவிக்க வேண்டுமென்றால் ரூ.50 லட்சம் பணய தொகை தர வேண்டும் என அந்த கும்பல் மிரட்டல் விடுத்துஇருந்தது .
கடத்தப்பட்ட இளைஞர்களின் உறவினர்கள் , கடத்தல்காரர்களிடம் பேரம் பேசி பணய தொகையை ரூ.10 லட்சத்திற்கு இறுதி செய்தனர் . இது ஒருபுறம் இருக்க போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு ,கடத்தல்காரர்களை பிடிக்கும் பணிகளும் தீவிர படுத்தப்பட்டது .
மேலும் போலீசாரின் விசாரணையில் இந்த கடத்தல் சம்பவத்தில் 5 பேர் ஈடுபட்டது தெரியவந்தது . உறவினர்கள் போல் பணய தொகையை கொடுக்க சென்ற சிறப்பு காவல் படையை சேர்ந்த காவல் அதிகாரிகள் , அந்த கும்பலை சேர்ந்த 4 பேரை சுற்றிவளைத்து பிடித்தனர் . அதில் ஒருவர் மட்டும் தப்பி ஓடிவிட்டார் .
போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் கைது செய்யப்பட்டவர்களில் இருவர் கராய்ச்சி காவல் நிலையத்தில் தற்பொழுது காவலர்களாக பணியாற்றி வருகிறார்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது . மேலும் கடத்தப்பட்ட இளைஞர்களை ஷா லத்தீப் நகர காவல் நிலையத்திலேயே அடைத்து வைத்திருந்தது தெரிய வந்து.
அந்த காவல் நிலைய உயரதிகாரி உத்தரவின்பேரிலேயே இளைஞர்கள் கடத்தப்பட்டனர் என விசாரணையில் தெரிய வந்தது. அவரை பிடித்து விசாரித்ததில், சமீப ஆண்டுகளில் காவல் அதிகாரிகள் பலர் குற்ற செயல்களுக்காக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டும், நூற்றுக்கணக்கானோர் குற்ற பதிவுகளுக்காக காவல் படையில் இருந்து வெளியேற்றப்பட்டும் உள்ளனர்.