லோக்சபா தேர்தல் 2024 முடிவுகளில் தருமபுரி தொகுதியில் யார் வெல்ல போவது என்ற எதிர்பார்ப்பு வலுத்துள்ளது . தருமபுரியில் திமுக மற்றும் பாமக கட்சிகளிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் ஆ மணி முன்னிலை பெற்றுள்ளார்.
இதுவரை தொடர்ந்து முன்னிலை பெற்று வந்த வேட்பாளர் சவுமியா அன்புமணி தற்போது பின்னடைவு அடைந்துள்ளார். சவுமியா அன்புமணி தற்போது 11,000 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்திருக்கிறார்.
சவுமியா 2,89,094 வாக்குகளை பெற்றுள்ள நிலையில் திமுக-வின் மணி மொத்தமாக 3,00,237 வாக்குகள் பெற்று முன்னிலை அடைந்துள்ளார். இந்த முறை தருமபுரி தொகுதியில் கடுமையான போட்டி நிலவி வருகிறது.

இந்த தேர்தலில் தருமபுரி தொகுதியில் திமுகவின் சிட்டிங் எம்பி டாக்டர் செந்தில் குமாருக்கு சீட் மறுக்கப்பட்டு ஆ மணி என்ற புதியவர் எம்பி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு களமிறக்கப்பட்டார்.
இங்கே பாஜக கூட்டணியில் தருமபுரி தொகுதியில் பாமக சார்பில் போட்டியிடுகிறார் பாமக தலைவர் ராமதாஸ் அவர்களின் மனைவி சவுமியா அன்புமணி. இவர்கள் இருவரும் போக இங்கே நாம் தமிழர் சார்பாக டாக்டர் அபிநயா பொன்னிவளவன் போட்டியிடுகிறார். அதிமுக சார்பாக ஆர் அசோகன் போட்டியிடுகிறார்.

சவுமியாவின் மாமனார் பாமக நிறுவனர் ராமதாஸ் என்பதும் இவரது கணவர் அன்புமணி ராமதாஸ் முன்னாள் மத்திய அமைச்சர், முன்னாள் லோக்சபா எம்பி, மாநிலங்களவை எம்பி, பாமக தலைவர் என பல்வேறு பொறுப்புகளில் வகித்து வருகிறார் என்ற பல்வேறு பலம் சவுமியவிற்கு இருந்தது.
இங்கே அன்புமணி களமிறக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த தொகுதி வேட்பாளராக பாமக சார்பாக அரசாங்கம் என்பவர் அறிவிக்கப்பட்டார். அதன்பின் அவர் மாற்றம் செய்யப்பட்டு அண்புமணியின் மனைவி சவுமியா வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
இவர்களுக்கு இடையில் அங்கே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இப்போது வரை கள நிலவரப்படி பார்த்தால் திமுகவிற்கு சாதகமான சூழ்நிலையே அங்கே உள்ளது.

தருமபுரியில் கள நிலவரம் திமுக வேட்பாளர் ஆ மணிக்கு ஆதரவாக இருந்தாலும், சில இடங்களில் களப்பணிகள் கடைசி கட்டத்தில் தொய்வு அடைந்ததாக கூறப்படுகிறது.
முக்கியமாக வன்னிய வாக்காளர்கள் சவுமியாவிற்கு ஆதரவாக அதிக அளவில் களமிறங்கி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று வெளியாக உள்ள லோக்சபா தேர்தல் 2024 முடிவுகளில் தருமபுரியில் யார் வெல்ல போவது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.