Bandhipur : கேமோபிளாக் டீ-ஷர்ட அணிந்து புலிகளை பார்வையிட்ட பிரதமர் மோடி .

1 Min Read
கேமோபிளாக் டீ-ஷர்ட இல் பிரதமர் மோடி

சென்னையில் இருந்தவாறே தமிழகத்தில் பல்வேறு திட்ட பணிகளை தொடங்கி வைத்த பாரத பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரவு தனி விமானத்தில் கர்நாடக மாநிலம் மைசூருக்கு சென்றார் . அங்கு மைசூருவில் உள்ள பிரபல ஓட்டலில் பிரதமர் மோடி இரவு ஓய்வெடுத்தார் .

- Advertisement -
Ad imageAd image

அங்கிருந்து இன்று பந்திப்பூர் புலிகள் சரணாலயத்தை பிரதமர் மோடி பார்வையிட்டார். அப்பொழுது அவர் மிடுக்கான கேமோபிளாக் டீ-ஷர்ட் அணிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .

பந்திப்பூர் வனப்பகுதி, புலிகள் சரணாலயத்தை சுற்றி பார்க்கும் முதல் இந்திய பிரதமர் மோடி என்ற பெருமையையும் இவரையே சாரும் . பந்திப்பூர் வனப்பகுதியில் 22 கி.மீ. தூரம் பிரதமர் மோடி பயணம் செய்கிறார்.

கேமோபிளாக் டீ-ஷர்ட இல் பிரதமர் மோடி 

பிரதமர் வருகையையொட்டி நேற்று மாலை முதல் பந்திப்பூர் வழியாக செல்லும் அனைத்து சாலைகளிலும் வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் பந்திப்பூர் புலிகள் சரணாலயத்தில் 3 நாட்களாக பொது மக்கள் பார்வைக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது  .

பந்திப்பூர் புலிகள் சரணாலயத்தில் வாகன சவாரிக்கு பிறகு பிரதமர் மோடி முதுமலை புறப்படுகிறார். நீலகிரி மாவட்டம் முதுமலைக்கு பிரதமர் மோடி வருகிறார். தெப்பக்காடு யானைகள் முகாமை பிரதமர் மோடி பார்வையிடுகிறார். பின்னர் ஆஸ்கர் தம்பதி பொம்மன்-பெள்ளியை பிரதமர் மோடி சந்திக்க உள்ளார்.

பிரதமர் வருகையையொட்டி முதுமலை தெப்பக்காடு முகாமில் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் .

Share This Article
Leave a review