கிரிக்கெட் போட்டியுடன் காங்கிரஸை விமர்சித்து பேசிய பிரதமர் மோடி..!

2 Min Read

ராஜஸ்தானில் காங்கிரஸ் பேட்ஸ்மேன்கள் ஒருவரை ஒருவர் ரன் ஆவுட் ஆக்கும் முயற்சிலேயே 5 ஆண்டுகளை கழித்து விட்டதாக பிரதமர் மோடி கூறினார்.

- Advertisement -
Ad imageAd image

காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் வருகின்ற 25 ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களின் தேர்தல் தேதியைக் கடந்த அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி அன்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பிருந்தே இந்த ஐந்து மாநிலங்களிலுமே அரசியல் கட்சிகள் தீவிரமாகத் தங்கள் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வந்தனர். சில இடங்களில் தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பிரதமர் மோடி

இதில் சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், மிசோரம் ஆகிய மாநிலங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. இதனையொட்டி பாரதிய ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்ய பிரதமர் மோடி நேற்று அங்கு சென்றார். சுரு மாவட்டம் தாரா நகரில் நடந்த பாரதிய ஜனதா தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது; காங்கிரஸ் கட்சியின் மோசமான நிர்வாகத்தால் ராஜஸ்தானில் பண வீக்கமும் வேலையில்லா திண்டாட்டமும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு சென்று விட்டன.

இந்த 5 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் ஒருவரை ஒருவர் அவுட் ஆக்கவே ஓடிக் கொண்டிருக்கிறார்கள். இதில் அவுட் ஆகிறவர்கள், பெண்கள் மற்றும் இதர பிரிவினர் பற்றி தவறான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அதில், அவுட் ஆகாமல் எஞ்சி இருப்பவர்கள் ஊழலிலும், மேட்சி பிக்சிங்கிலும் ஈடுபட்டு வருகிறார்கள். காங்கிரஸின் தவறான ஆட்சியில் ராஜஸ்தான் மாநிலத்தில் வேலையின்மை அதிகரித்து வருகிறது. காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சியும் எதிரிகள் தொடர்ந்து எதிரிகளாகவே இருக்கும். காங்கிரஸ்க்கும் நல்ல நோக்கத்துக்கும் இடையிலான உறவு, இருளுக்கும் ஒளிக்கும் இடையிலான உறவு போன்றது.

பிரதமர் மோடி

ராஜஸ்தான் காங்கிரஸ் ஒரு கிரிக்கெட் அணி போன்றது ஒருவரே ஒருவர் ரன் ஆவுட் ஆக்கும் முயற்சியிலேயே 5 ஆண்டுகளை கழித்து விட்டனர். ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் விவகாரம் தொடர்பாக முன்னாள் ராணுவத்தினரை காங்கிரஸ் கட்சி பல ஆண்டுகளாக திசை திருப்பி வருகிறது. ராஜஸ்தான் மாநிலம் விரிவான வளர்ச்சி அடைய சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு வாக்களியுங்கள் இவ்வாறு அவர் பேசினார்.

Share This Article
Leave a review