இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று தமிழ்நாடு வந்தடைந்தார். அவரை தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் சால்வை அணிவித்து வரவேற்றார் . அப்பொழுது அவருடன் கவர்னர் ஆர்.என்.ரவி, மத்திய இணை-மந்திரி எல்.முருகன், அமைச்சர்கள், முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், ஜீகே வாசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர் .
ஐதராபாத்தில் இருந்து இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் மூலம் பிரதமர் மோடி சென்னை வந்தடைந்தார். இந்த பயணத்தின் போது 5 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.