
முன்னாள் திமுக தலைவரும், முதல்வருமான கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு முதல்வரின் அறிவுதலின் பேரில் மயிலாடுதுறையில் கட்சியின் மூத்த முன்னோடிகளுக்கு 1000 பேர்க்கு பொற்கிழி வழங்குகிற நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது.
பாஜக திமுகவை எதிர்ப்பதை போன்று திமுகவும்தான் பாஜகவை எதிர்க்கிறது. பாஜக திமுகவை எதிப்பதால் திமுக நல்ல பாதையில் போய்க் கொண்டிருக்கிறோம் என்பதற்கு அர்த்தம்.
ஒட்டுமொத்த தமிழகமும் பாஜாகவை எதிர்க்கதான் செய்கிறது. எந்த காலத்திலுமே பாஜக வை திராவிட முன்னேற்றக் கழகமாக இருக்கட்டும், தமிழக மக்களாக இருக்கட்டும், பாஜகவை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், எதிர்த்துக் கொண்டுதான் தான் இருப்பாங்க என்றார்.