தஞ்சையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடை, பட்டாசு உள்ளிட்ட பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம்..

1 Min Read
  • தீபாவளிக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில் தஞ்சையில் புத்தாடை, பட்டாசு உள்ளிட்ட பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.காலை முதல் இருந்தே விற்பனை களைகட்டி வருகிறது.

இந்துக்களின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக தீபாவளி பண்டிகை ஆகும் நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படும்.தீபாவளி பண்டிகைக்கான விற்பனை பொருட்கள் இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில் விற்பனை தஞ்சையில் களைகட்டி வருகிறது. தஞ்சை அண்ணாசாலை, காந்திஜி சாலை, பழைய பேருந்து நிலையம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.

- Advertisement -
Ad imageAd image

திருப்பூர், ஈரோடு, உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் லுங்கி.’ பெட்சீட் ஆண்கள் பெண்களுக்கான காலணிகள் பெண்களுக்கான தோடு வகைகள், நைட்டி. உள்ளிட்ட பொருட்கள் விற்பனைக்காக சாலைகளில் தற்காலிக கடைகள் அமைத்து உள்ளனர்.கிராமங்களில் இருந்து மக்கள் சாரை சாரையாக குடும்பத்துடன் வந்து புத்தாடைகள், பட்டாசு, உள்ளிட்ட பொருட்களை மக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.

மழை இல்லாத காரணத்தால் கடைசி ஒரு நாள் இருக்கும் நிலையில் விற்பனை களை கட்டி வருகிறது.இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர் மேலும் பொது மக்களின் பாதுகாப்பிற்காக ஆங்காங்கே சிசிடிவி காட்சிகளும் அமைக்கப்பட்டு உள்ளது.

கொஞ்சம் இதையும் படிங்க :  https://thenewscollect.com/former-hief-minister-panneerselvams-property-transfer-case-madras-high-court-ordered-to-transfer-the-case-to-madurai-special-court/ 

பொதுமக்கள் அதிக அளவில் இருப்பதாலும் அவர்களுக்கு தேவையான பொருட்கள் வாங்க குவிந்துள்ளதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.மேலும் கூட்டம் அதிகம் இருப்பதால் திருடர்கள் கைவரிசை காட்ட முயற்சிப்பார்கள் தாங்கள் கொண்டு வந்துள்ள பொருட்களை குழந்தைகளை பத்திரமாக வைத்திருக்க வேண்டும் என்று காவல்துறையினர் ஆங்காங்கே ஒலிபெருக்கி மூலமாக காவல்துறையினர் எச்சரித்து வருகிறார்கள்.

Share This Article
Leave a review