சென்னையில் திமுக சார்பில் நடைபெற்ற மகளிர் உரிமை மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி, மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெகபூபா முப்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சுபாஷினி அலி மற்றும் முக்கியத் தலைவர்கள் திராளாக கலந்து கொண்டனர் .
இந்த மாநாடு மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நேற்று சென்னை YMCA மைதனானத்தில் விகு விமர்சையாக நடைபெற்றது .
கூட்டத்தில் உரையாற்றிய காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற தலைவர் சோனியா காந்தி, மகளிர் இடஒதுக்கீடு மசோதாவின் கடினப் பயணத்தை விளக்கிப்பேசினார் . ஐக்கிய முற்போக்குக் கூட்டணியால் முன்னெடுக்கப்பட்ட மகளிர் இடஒதுக்கீடு மசோதா ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டது, ஆனால் ஒருமித்த கருத்து இல்லாததால் மக்களவையில் அது நிறைவேறாமல் தடுக்கப்பட்டது.

இப்போது, பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா இறுதியாக நம் இடைவிடாத விடாமுயற்சியால் நிறைவேற்றப்பட்டுள்ளது இதற்கான பாராட்டு காங்கிரஸ் கட்சியை மட்டுமில்லாமல் இதற்கு ஆதரவு அளித்த அணைத்து கட்சியினருக்கும் சேரும் .
ஆனால் இந்த மசோதா நடைமுறை படுத்துவதற்கு இன்னும் நீண்ட தூர பயணம் மேற்கொள்ள வேண்டியுள்ளது என்பதை நாம் அனைவரும் அறிவோம் ! எப்போது இந்த மசோதா செயல்படுத்தப்படும்? ஒரு வருடத்திலா , இரண்டு வருடங்களிலா , மூன்று வருடங்களிலா ? யாருக்கும் எதுவும் தெரியாது .
மேலும் அவர் பேசுகையில் “இந்த மாநாட்டில் கலந்துகொண்ட சில ஆண்கள் மகிழ்ச்சியாக இருப்பதை நான் பார்க்கிறேன், ஆனால் நாங்கள் (மகளிர்) இல்லை. அதே மகிழ்ச்சி எங்களுக்கும் கிடைக்கும் வரை போராடப் போகிறோம்.” என்று அவர் தெரிவித்தார் .
காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி வதேரா, இந்தியாவில் பாலினம் தொடர்பான சவால்கள் நீடித்து வருவதைத் குறித்து மாநாட்டில் பேசினார் அப்போது அவர் “நமது தேசம் முழுவதும், முன்னேற்றத்தின் மேற்பரப்பிற்கு அடியில், வேரூன்றிய ஆணாதிக்கம் மற்றும் பெண்கள் மீதான ஒடுக்குமுறை ஆகியவற்றை களைய கடுமையாக நாம் இன்னும் போராடிக் கொண்டிருக்கிறோம்.பெண்கள் ஏன் இன்னும் அடிமைகளாக இருக்கிறார்கள்?” என்று கேள்வி எழுப்பினார் . “அரசியல் செயல்பாட்டில் மகளிருக்கு சமஉரிமை ஒதுக்கப்படுவது எங்கள் உரிமை” என்று வலியுறுத்தினார்.

இந்தியப் பெண்களாகிய நமக்கு இனி வீணடிக்க நேரமில்லை” என்று பெண்களுக்கான இடஒதுக்கீட்டிற்கு தனது ஆதரவைத் தெரிவித்ததோடு, மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை உடனடியாக அமல்படுத்தக் கோரினார்.
தி.மு.க மகளிர் உரிமை மாநாட்டில் பேசிய தேசியவாத காங்கிரஸ் எம் பி சுப்ரியா சுலே, தமிழ் மொழி மற்றும் கல்வியின் முன்னேற்றத்திற்கு தமிழ் சமூகம் ஆற்றிய பங்களிப்பை வெகுவாக பாராட்டினார். நீங்கள் அனைவரும் நம் மொழியின் மீது பெருமை கொள்கிறீர்கள், தமிழ் சமூகத்தில் சாதி, மதம் இல்லை என்பதை பார்ப்பது மிகவும் அழகாக உள்ளது. தமிழ் மொழியின் மீதான காதல் தமிழ்நாட்டை ஒருங்கிணைக்கிறது.
தில்லியில் இருந்து உணரப்படும் ஊடுருவல்களுக்கு எதிராக கூட்டுறவு கூட்டாட்சியை பாதுகாப்பதில் ஒற்றுமை தேவை.தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிராவின் ஒற்றுமை அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது , என்று அவர் தெரிவித்தார் .

சமாஜ்வாடி கட்சியின் எம்பி டிம்பிள் யாதவ், கூட்டத்தில் உரையாற்றுகையில், சமூக நீதி, தனிமனித கண்ணியம் மற்றும் பெண்களின் உரிமைகளுக்கான கட்சியின் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டினார் .
பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில் உள்ள ஒவ்வொரு தனிநபரின் மரியாதை மற்றும் கண்ணியத்தைப் பாதுகாப்பதில் ஒரு அசைக்க முடியாத உறுதிப்பாட்டை நிலைநிறுத்துவதில் சமாஜ்வாடி கட்சி உறுதியாக உள்ளது.
பிராந்திய, சமூக, கலாச்சார மற்றும் மொழியியல் அடையாளங்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை டிம்பிள் யாதவ் வலியுறுத்தினார், தலைமை பண்பில் இருப்பவர்கள் பன்முகத்தன்மையை ஊக்குவிக்க வேண்டும், ஒதுக்கிவைக்கக்கூடாது என்று வலியுறுத்தினார்.
தி.மு.க.வின் மகளிர் உரிமைகளுக்கான மாநாட்டை முன்னிட்டு நந்தனம் பகுதியிலும் மவுண்ட் ரோட்டிலும் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தியின் கொடிகள் மற்றும் பதாகைகள் நிறுவப்பட்டன.

இந்த மாநாடு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் , திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் ஒருங்கிணைந்த ஜனதா தளம் , இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் உட்பட I.N.D.I.A பிளாக்கின் பெண் தலைவர்கள் கலந்து கொண்டனர் .
மேற்கு வங்க மாநிலத்தில் துர்கா பூஜா விழாவையொட்டி மம்தா பானர்ஜி இந்த மாநாட்டில் பங்குகொள்ளவில்லை என்று திமுக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன .