தூய்மை பணியாளர்களின் கால்களை கழுவி பாதை பூஜை – நீதிபதிகள்..!

2 Min Read

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் தூய்மை செய்யும் பணியாளர்கள், திடிரென்று நீதிபதிகள் பணியாளர் பெண்ணின் கால்களை தண்ணீர் ஊற்றி கழுவி, பாதை பூஜை செய்து, தூய்மை செய்யும் பெண் பணியாளருக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தி, கைகூப்பி கும்பிட்ட நீதிபதிகள்.

- Advertisement -
Ad imageAd image

இந்த நகரம், சுறு சுறுப்பாக இயங்கி கொண்டு இருக்கும் ஒரு குழந்தை. தினமும் இது ஓடி, ஆடி, விளையாடி களைத்து வரும். மீண்டும் காலையில் இதை புதிப்பித்து, அழகுசேர்த்து , சீர்படுத்தி பள்ளி செல்லும் பிள்ளை போல அழகாக மாற்றுவது தூய்மை பணியாளர்களே.! ஒருவருக்கு ஒரு நன்மையும் நாம் செய்யாத போதும், அவர் நமக்கு உதவினால், அதற்குக் கைம்மாறாக மண்ணுலகையும் விண்ணுலகையும் கொடுத்தாலும் சமம் ஆகாது.

தூய்மை செய்யும் பணியாளர்கள்

ஏழ்மையிலும் நேர்மையாக இருக்கும் இவர்களை நாம் மனதார பாராட்டுவோம். அதே நேரம், தங்களது வாழ்க்கை தரம் உயர, அவர்கள் வைத்திருக்கும் சின்ன சின்ன கோரிக்கைகளையும், வேண்டுகோள்களையும் அரசும், இவர்களது நிறுவனமும், நாமும் நிறைவேற்றிடவேண்டியது அவசியம்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், நடந்த சம்பவம் : உளுந்தூர்பேட்டையில் நீதிமன்ற வளாகத்தை தூய்மை செய்யும் பணியாளர்கள், திடிரென்று நீதிபதிகள் பணியாளர் பெண்ணின் கால்களை தண்ணீர் ஊற்றி கழுவி, பாதை பூஜை செய்து, பெண் பணியாளருக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தி கை கைகூப்பி கும்பிட்ட நீதிபதிகளின் செயல். இச்சம்பவம் அனைவ்ரும் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூய்மை செய்யும் பணியாளர்கள்

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை நீதிமன்ற வளாகத்தை தூய்மைப்படுத்துவதற்காக தூய்மை செய்யும் பணியாளர்களை நகராட்சி நிர்வாகம் மற்றும் வழக்கறிஞர் சங்கத்தினர் ஏற்பாடு செய்தனர். இந்த மாபெரும் நிகழ்வில் நீதிபதிகள் மற்றும் நகராட்சி தலைவர் ஆகியோர் கலந்து கொண்டு தூய்மை செய்யும் பணியாளர்களை அனைவரும் முன்னிலையில் பாராட்டி பேசினர்.

மேலும் நீதிமன்ற வளாகத்தில் உள்ள இடங்களை தூய்மைப்படுத்தும் பணியை துவக்கி வைத்தனர். அதன் பின்பு நீதிமன்ற வளாகத்தில் தூய்மைப்பணியாளர்கள், தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிகழ்வில் நீதிபதிகள் வழக்கறிஞர்கள் மற்றும் நகராட்சி ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

உளுந்தூர்பேட்டை நீதிமன்ற வளாகத்தை தூய்மை செய்யும் நீதிபதிகள் மற்றும் நகராட்சி தலைவர்

அதனை தொடர்ந்து தூய்மை செய்யும் பணியாளர்கள், திடிரென்று நீதிபதிகள் பணியாளர் பெண்ணின் கால்களை தண்ணீர் ஊற்றி கழுவி, பாதை பூஜை செய்து, தூய்மை செய்யும் பெண் பணியாளருக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தி, கைகூப்பி கும்பிட்டு, நீதிபதிகள் அனைவரும் முன்னிலையில் மரியாதை செலுத்தினர். இந்த சம்பவம் அனைவ்ரும் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Share This Article
Leave a review