சின்னசேலம் பிடிஓவை தாக்கிய ஊராட்சி செயலாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், அடுத்த சின்னசேலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கிராம ஊராட்சி பி. டி. ஓ-வாக பணிபுரிபவர் ஜெகநாதன். இவர், வரும் லோக்சபா தேர்தலை முன்னிட்டு ஒன்றியத்தில் பணிபுரியும் ஊராட்சி செயலாளர்களை பணியிட மாற்றம் செய்வதற்கான பட்டியல் தயார் செய்துள்ளார். அதில், தொட்டியம் ஊராட்சி செயலர் துரையை, வி. பி. அகரம் ஊராட்சிக்கு மாற்றியுள்ளார். அதில் ஆத்திரமடைந்த துரை, நேற்று இரவு 8 மணிக்கு வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு சென்று, அங்கு பணியில் இருந்த பி. டி. ஓ. ஜெகநாதனை திட்டி தாக்கினார்.

அப்போது திடுக்கிட்ட சக ஊழியர்கள், ஜெகநாதனை மீட்டு சின்னசேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தகவலறிந்த மாவட்ட திட்ட இயக்குனர் தனபதி, ஒன்றிய சேர்மன் சத்தியமூர்த்தி உள்ளிட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஜெகநாதனை சந்தித்து ஆறுதல் கூறினர். கள்ளக்குறிச்சி மாவட்டம், அடுத்த சின்னசேலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தொட்டியம் ஊராட்சி செயலர் துரை.
இவரை வி.பி. அகரம் ஊராட்சிக்கு சின்னசேலம் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) ஜெகன்நாதன் பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். பின்னர் தகவல் அறிந்த ஊராட்சி செயலர் துரை நேற்று முன் தினம் இரவு அலுவலகத்தில் பணியில் இருந்த வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெகன்நாதனை ஆபாசமாக திட்டி என்னை எப்படி பணியிடமாற்றம் செய்யலாம் என கூறி பி.டி.ஓ நெஞ்சில் கையால் குத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனால் அவர் நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்ட பி.டி.ஓ ஜெகன்நாதன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இதுகுறித்து பி.டி.ஓ ஜெகநாதன் கொடுத்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார், அவர் மீது 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில் ஊராட்சி செயலாளர் துரையை சின்னசேலம் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) (பொ) ரவிசங்கர் தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

மேலும் பணி நீக்கம் செய்யப்பட்ட தொட்டியம் ஊராட்சி செயலாளர் துரை என்பவருக்கு சின்னசேலம் ஊராட்சி ஒன்றியம் தலைமையிடமாகும். பின்னர் மேற்படி ஊராட்சி செயலாளர் முன் அனுமதி பெறாமல் தலைமையிடம் விட்டு வெளியேறக்கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனால் தொட்டியம் ஊராட்சிக்கு அருகில் உள்ள நமச்சிவாயபுரம் ஊராட்சி செயலாளர் நல்லமுத்து என்பவருக்கு தொட்டியம் ஊராட்சி செயலாளராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது என குறிப்பிடத்தக்கது.