விழுப்புரம் மாவட்டம் பெரும்பாலும் விவசாயத்தை நம்பியிருக்கும் மாவட்டம்.ஏரி பாசனம் இந்த மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக இருந்து வருகிறது.விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஏரி மாதம் பூண்டி, சோ.குப்பம் ,கணக்கன் குப்பம் ஆகிய ஏரிகளை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி ஆய்வு செய்தார்.வடகிழக்கு பருவ மழை தொடர்ந்ததையடுத்து தமிழகம் முழுவதும் தற்போது மழை பெய்து வருவதால் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஏரிகளின் நிலையறிந்து அதிகாரிகளுடன் ஆட்சியர் ஆலோசனை மேற்கொண்டார்.இந்த பகுதியில் உள்ள ஏரிகள் பெருமளவு விவசாயத்திற்கு தேவையானதாக இருந்து வரும் நிலையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டமாக கள்ளக்குறிச்சி,கடலூர்,விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள் இருந்த போதிலிருந்தே நந்தன் கால்வாய் விவசயிகளுக்கு நீர் ஆதாரமாக இருந்து வந்திருக்கிறது.நந்தன் கால்வாய் திட்டத்தில் தற்போது பல்வேறு பணிகள் முடிக்கப்பட்டு வருகின்றன. இதனைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி இப்ப பணிகளை ஆய்வு செய்து மாதம் பூண்டி ஊராட்சியில் உள்ள நீர் வரத்து வருவதை பார்வையிட்டு வாய்க்காலில் படியும் வண்டல் மண்ணை தூர்வாரி நீர்வரத்து தங்கு தடை இன்றி செல்ல வழி செய்து விட வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து சோ.குப்பம் ஊராட்சியில் உள்ள நீர்வரத்து வரும் கால்வாயில் செடி கொடிகளை அகற்றி நீர் தங்கு தடை இன்றி சென்றிடவும் கரையை பலப்படுத்திடுவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

மேலும் கணக்கன் குப்பம் ஊராட்சியில் உள்ள நீர் வரத்து வரும் வாய்க்காலில் தூர்வாரி வாய்க்காலில் இருபுறமும் உள்ள கரைகளை பலப்படுத்திடவும் ஆக்கிரமிப்புகள் ஏதேனும் இருப்பின் அவற்றை அகற்றிட வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார், நீர்வரத்தை பார்வையிட்டு வண்டல் மண் படிவங்களை தூர்வாரி நீர் அதிக அளவில் ஏங்கு பணி செய்து வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் மேலும் விவசாயிகளின் கோரிக்கையான ஏரியின் மதகு அமைப்பதற்கு விரைந்து நடவடிக்கை எடுத்து அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார். பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்கள் உதவி செயற்பொறியாளர்கள் ஆகியோர் ஆட்சியருடன் இருந்தனர்.