தங்கத்தாலேயே தங்க மனசுக்காரர் கேப்டன் விஜயகாந்த் உருவத்தை வரைந்து ஓவியர் அஞ்சலி..!

2 Min Read

ஓவிய அஞ்சலி விஜயகாந்த் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக “தங்கத்தாலேயே” (தங்க காசு ) தங்க மனசுக்காரர் விஜயகாந்த் உருவத்தை வரைந்து ஓவிய ஆசிரியர் அஞ்சலி.

- Advertisement -
Ad imageAd image

உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விஜயகாந்த்திற்கு கொரோனா தொற்று உள்ளதாகவும் சுவாசிப்பதில் சிக்கல் இருப்பதால் வென்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்து வருவதாகவும் தேமுதிக தலைமை கழகம் இன்று காலை அறிவித்திருந்தது. இந்த நிலையில் சற்று நேரத்திற்கு முன்பு விஜயகாந்த் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் திரைப்பட துறையில் கொடி கட்டி பறந்த நிலையில் அதன் பிறகு அரசியலில் காலூன்றி அதிலும் வெற்றி பெற்று எதிர்க்கட்சித் தலைவர் வரை பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 2006 முதல் 2016 வரை தமிழக சட்டமன்ற உறுப்பினராகவும், 2011 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவராகவும் இருந்தார்.

விஜயகாந்த் உருவத்தை வரைந்து ஓவியர்

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அடுத்த சிவனார்தாங்கல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பகுதி நேர ஓவிய ஆசிரியராக பணிபுரியும் மணலூர்பேட்டை சேர்ந்த சு. செல்வம் அவர்கள் விஜயகாந்த் மறைவையொட்டி அஞ்சலி செலுத்தும் விதமாக தங்க மனசுக்காரர் கேப்டன் அவர்களின் உருவத்தை “தங்கத்தாலேயே” ( தங்க காசு ) ஓவிய ஆசிரியர் செல்வம் வரைந்து அஞ்சலி செலுத்தினார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமலஹாசன் இருவரும் முன்னிலை இருக்கும் போது புரட்சிக் கலைஞராக மாஸ் காட்டியவர் விஜயகாந்த், ரசிகர்களால் செல்லமாக கேப்டன் என் அழைக்கப்பட்டார். தமிழ் திரை உலகிலும் சரி தமிழ்நாடு அரசியலும் சரி தவிர்க்க முடியாத பெயராக உருவெடுத்தவர் தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் ஆவார். இவர் தமிழ் திரையுலக பிரபல முன்னணி முக்கிய நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் தமிழக சட்டசபை அரசியல்வாதியும் ஆவார். ஓவிய ஆசிரியர் செல்வம் கூறுகையில்;

விஜயகாந்த் உருவத்தை வரைந்து ஓவியர்

இவருக்கு தமிழ் சினிமாவில் “புரட்சி கலைஞர்’ என்னும் பட்டம் உண்டு. நல்ல மனிதர், அனைவராலும் விரும்பப்படக்கூடியவர், தங்க மனசுக்காரர் அவருடைய மறைவு அதிர்ச்சி அளிக்கிறது. கேப்டன் அவர்களின் மறைவுக்கு செலுத்தும் விதமாக தங்க மனசுக்காரர் விஜயகாந்த் உருவத்தை இரண்டு பவுன் மதிப்பு உள்ள தங்க காசுவை நீர் வண்ணத்தில் தொட்டு “தங்கத்தாலேயே” தங்க மனசுக்காரர் விஜயகாந்த் உருவத்தை ஐந்து நிமிடங்களில் ஓவிய ஆசிரியர் செல்வம் வரைந்து அஞ்சலி செலுத்தினர்.

Share This Article
Leave a review