விஜயகாந்திற்கு பத்மபூஷன் விருது – பிரேமலதா மகனுடன் டெல்லி பயணம்..!

1 Min Read

மறைந்த தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்திற்கு வரும் 9 ஆம் தேதி பத்மபூஷன் விருது வழங்கப்படுகிறது. இந்த விருதை பெறுவதற்காக பிரேமலதா தனது மகனுடன் டெல்லி செல்கிறார்.

- Advertisement -
Ad imageAd image

டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் 5 பேருக்கு பத்ம விபூஷண் விருது, 17 பேருக்கு பத்ம பூஷன் விருதுகளை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார்.

விஜயகாந்திற்கு பத்மபூஷன் விருது

மேலும், 110 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டன. முன்னாள் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடுவிற்கு பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது. மேலும், மறைந்த நடிகர் விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், பத்ம விபூஷன் விருது கொடுக்கப்படுவதாக ஒன்றிய அரசு அறிவித்ததை தொடர்ந்து, முறைப்படி எந்த அழைப்பும், அறிவிப்பும் கொடுக்கவில்லை என விஜயகாந்த் குடும்பத்தினர் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

பிரேமலதா மகனுடன் டெல்லி பயணம்

இதனை தொடர்ந்து சமீபத்தில் தங்களுக்கு விருது பெற்றுக் கொள்ள அழைப்பு வந்தததாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். இந்த நிலையில் 9 ஆம் தேதி விஜயகாந்திற்கு பத்ம பூஷன் விருது வழங்கப்படுகிறது.

இந்த விருதை பெறுவதற்காக வரும் 8 ஆம் தேதி தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் டெல்லி செல்கிறார். அவருடன் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரனும் டெல்லி செல்ல உள்ளார். விருதை பெற்று கொண்டு வருகிற 11 ஆம் தேதி காலை சென்னை திரும்புகின்றனர்.

Share This Article
Leave a review