ஏற்கெனவே 19 மாவட்டங்களுக்கு அடுத்த 3 மணி நேரம் மழை பெய்யும் என்று அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது தமிழகத்தின் வடகடலோர மாவட்டங்களுக்கு இன்று நாள் முழுவதுக்குமான மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை முதல் அதிகனமழை பெய்யும் என வாய்ப்புள்ளதால் சென்னை வானிலை ஆய்வு மையம் 4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தென் தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் மிக தீவிரம் அடைந்துள்ளதை அடுத்து தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களில் நேற்று பல்வேறு இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வந்துள்ளது.தமிழகத்தில் உள் மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், மதுராந்தகம், திருவள்ளூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, நெய்வேலி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், ராஜாபாளையம், போடிநாயக்கனூர் போன்ற இடங்களில் கனமழை பெய்து உள்ளது.
தமிழகத்தில் திருநெல்வேலி, நெய்வேலி, உளுந்தூர்பேட்டை, விருத்தாசலம், ஸ்ரீ. முஷ்ணம், பெண்ணாடம் ஆகிய இடங்களில் கனமழை பெய்தது. தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் காற்றுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழையும் பெய்து வந்துள்ளது. இந்த நிலையில், தென் மேற்கு வங்கக் கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள வளி மண்டல கீழடுக்கு சுழற்சி எற்பட்டு உள்ளது. தற்பொழுது மேலும் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சியும் நிலை கொண்டுள்ளது.

இந்த இரண்டு நிகழ்வுகளின் காரணமாக இன்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ம்ற்றும், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது.
இதன் கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உட்பட 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதேநிலை 10 ஆம் தேதி வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெறிவித்து உள்ளது.