- பட்டுக்கோட்டை அருகே உள்ள தம்பிக்கோட்டை வடகாடு கிராமத்தில்
போலீஸ் அனுமதியுடன் சிலிக்கான் தாது மணல் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் 500க்கும் மேற்பட்டோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம், தம்பிக்கோட்டை வடகாடு கிராம மக்கள் மணல் திட்டுகளில் கிடைக்கும் ஊற்று நீரை குடிநீராகப் பயன் படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் சிலிக்கான் தாது மணல் இருப்பதாகக் கூறிசுமார் 11 ஏக்கர் நிலப்பரப்பில் 26 அடி ஆழத்திற்கு சிலிகான் தாது மணல் எடுத்து விற்பனை செய்ய தனியாருக்கு அரசு அனுமதி வழங்கி உள்ளது.
இதை பயன்படுத்தி தனிநபர் அதிகப்படியான ஆழத்துக்கு மணல் எடுப்பதற்கான முன்னேற்பாடுகளை செய்தார். அவ்வாறு மணல் எடுக்கப்பட்டால், எங்களுடைய பகுதி கடலுக்கு அருகில் இருப்பதால் ஊற்று நீரில் உப்பு நீர் உட்புகும் அபாயம் உள்ளது.
கொஞ்சம் இதையும் படிங்க : https://thenewscollect.com/the-madras-high-court-dismissed-the-bail-pleas-of-4-key-executives-of-hijavu-finance-company/
மேலும், தென்னை மற்றும் பனை மரங்கள் அழியக்கூடிய அபாய நிலை உள்ளது கிராம மக்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும்,மணல் எடுக்க அரசு அனுமதிக்க கூடாது என கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இந்நிலையில் தனி நபர் தனது செல்வாக்கை பயன்படுத்தி போலீசார் பாதுகாப்புடன் சிலிக்கான் மணலை எடுக்க முயற்சி செய்வதாக பொதுமக்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில்,கிராம மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தோப்பு முத்துமாரியம்மன் கோவிலில் சுமார் 500க்கும் மேற்பட்ட பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்நிலையில் அப்பகுதியில் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது: