நாடாளுமன்றத்தில் ராகுல்காந்தி இந்துக்கள் குறித்து பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி சட்டமன்ற வாயிலில் அமர்ந்து பாஜக நியமன எம்.எல்.ஏ அசோக்பாபு தர்ணா போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து பேசினார். அப்போது ஒன்றிய அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து விமர்சனம் செய்த நிலையில், இந்துக்கள் குறித்து கருத்துகளை தெரிவித்திருந்தார்.

இந்த வார்த்தைகளை அவைக்குறிப்பில் இருந்து சபாநாயகர் ஓம்பிர்லா நீக்கினார். இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் ராகுல்காந்தி இந்துக்கள் குறித்து பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர், பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி,
புதுச்சேரி பாஜகவை சேர்ந்த நியமன எம்.எல்.ஏ அசோக்பாபு சட்டமன்ற வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார். தகவல் அறிந்த சபாநாயகர் செல்வம், அங்கு வந்து எம்.எல்.ஏ.விடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனை ஏற்று, அவர் போராட்டத்தை விலக்கிக் கொண்டார்.

இதுகுறித்து போராட்டம் நடத்தும் அசோக்பாபுவிடம் முதல்வர் ரங்கசாமியின் செயல்பாடுகள் குறித்து பாஜக எம்.எல்.ஏ.க்கள், கட்சி தலைவர் ஜேபி 5 நட்டாவிடம் புகார் செய்ய டெல்லி சென்றுள்ளனர்.
நீங்கள் டெல்லி செல்லவில்லையா? எனக்கேட்ட போது, தற்போது இங்கு போராட்டம் நடத்துவதற்காக டெல்லி செல்லவில்லை. தேவைப்பட்டால் டெல்லி செல்வேன் என்றார்.