ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருவாரூர் ரயில் நிலையம் அருகில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு அதன் பின் கருப்புக் கொடி காட்ட முயன்ற திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மதசார்பற்ற அரசியல் இயக்கங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் போலீசாரால் கைது. தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக கருப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாகை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக ஆளுநர் இன்று காலை திருச்சி விமான நிலையம் வந்து தஞ்சை வழியாக திருவாரூர் வந்து திருவாரூரில் உள்ள விருந்தினர் மாளிகையில் தங்கி அதன் பிறகு மதியம் நாகை செல்ல இருந்தார். இந்த நிலையில் ஆளுநர் வருகைக்கு எதிராக ஏற்கனவே திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மதசார்பற்ற அரசியல் இயக்கங்களின் சார்பாக ஆளுநர் தமிழக மக்களுக்கு எதிராக செயல்பட்டு வருவதாகவும், பின்னர் காந்தியை இழிவுபடுத்தி விட்டதாகவும் என கூறி கண்டன போஸ்டர்கள் மாவட்டங்கள் முழுவதும் ஒட்டப்பட்டு இருந்தன.

மேலும் மதசார்பற்ற அரசியல் இயக்கங்கங்கள் இன்று கருப்புக்கொடி காட்டி ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவிக்க போகிறோம் என்றும், மாவட்டம் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன. அதன்படி ஆளுநர் இன்று திருவாரூர் விருந்தினர் மாளிகை வந்த நிலையில் திருவாரூர் ரயில் நிலையம் அருகில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மதச்சார்பற்ற அரசியல் இயக்கங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு அதன் பிறகு ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி காட்ட முயற்சித்து செல்ல முயன்றார்கள்.

இந்த நிலையில் ஏற்கனவே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 300-க்கும் மேற்பட்ட காவலர்கள் மற்றும் திருவாரூர் மாவட்ட காவல் உயர் அதிகாரிகள் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தார்கள். அவர்களை தடுத்து நிறுத்தும் பொழுது காவலர்களுக்கும் கருப்புக்கொடி காட்ட முயன்றவர்களுக்கும் சிறிது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.