கடந்த2014 ம் ஆண்டு முதல் நரேந்திர மோடி தலைமையிலான பாரதியஜனதா கட்சி தொடர்ந்து இருமுறை பெருபான்மை வெற்றிபெற்று அசைக்கமுடியாத சக்தியாக பாஜக மத்தியில் ஆட்சிசெய்து வருகிறது .
நடந்து முடிந்த 2019 ம் ஆண்டு மக்களவைதேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட முதலே பாஜக விற்கு எதிரான, எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒரு அணியாக திரண்டு, வருகின்ற 2024 மக்களவை தேர்தலில் பாஜக வை வீழ்த்தவேண்டும் என்ற ஒற்றை குறிக்கோளோடுசெயல்பட்டு வருகின்றன .
இந்நிலையில்பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் , அம்மாநில முதலமைச்சர் நிதீஷ்குமார் தலைமையில் இன்று ஒருங்கிணைந்த எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெறுகிறது .
நாடுமுழுவதிலும் இருந்து எதிர்க்கட்சித் தலைவர்கள் பாட்னாவில் குவிந்து வருவதால், பீகார் மாநிலம் மிகவும் பரபரப்பாக காணப்படுகின்றது , அதே வேலையில் எதிர்க்கட்சிகளின்இந்த ஒருங்கிணைத்த கூட்டத்தை பாஜககட்சினர் மற்றும் ஆதரவாளர்கள் “குண்டர்களின் கூட்டம்” என்று விமர்சனம் செய்து பாட்னா நகரம் முழுவதும் இந்த வசனம் பொருந்தியசுவரொட்டிகளால் நகரத்தை வெள்ளத்தில் மூழ்கடித்துள்ளது .
இக்கூட்டத்திற்குபாட்னாவை தேர்ந்தெடுத்தற்கு இரண்டு முக்கிய காரணங்கள் கூற படுகின்றது .
எதிர்க்கட்சிகள் பாட்னாவை அதன் கூட்டத்திற்கு ஒருஇடமாக தேர்ந்தெடுத்தது – டெல்லியிலிருந்து தொலைவில் உள்ள நடுநிலை நிலம் மற்றும்இந்திரா காந்தியின் பெரும்பான்மை அரசாங்கத்தை கவிழ்த்த ஜெயபிரகாஷ் நாராயணின் முழு புரட்சிக்கான அழைப்பு1974 ம் ஆண்டு பாட்னாவில்இருந்து தான் ஆரம்பிக்கப்பட்ட காரணத்தினால், மக்கள் விரோத அரசாக செயல்படும் பாஜக வுக்கு முடிவுகட்டபாட்னாவை தேர்ந்தெடுத்ததாக எதிர்க்கட்சிகள் தரப்பில் கூற படுகின்றது .

இக்கூட்டத்தில்முக்கிய முடிவாக எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஒரு அணியாக திரட்டி, குறைந்தது 400 மக்களவை தொகுதிகளில், பலமான வேட்பாளரை நிறுத்தி பாஜக வை முற்றிலுமாகவீழ்த்த முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்க படுகின்றது .
குறிப்பாகஅண்மையில் நடந்து முடிந்த இமாசலபிரதேசம் மற்றும் கர்நாடகசட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று அம்மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில் , பா.ஜ.க. தோற்கடிக்க முடியாத கட்சி அல்ல என்ற எண்ணத்தைஅணைத்து தரப்பு மக்களிடமும் உருவாக்கி , வருகின்ற 2024 மக்களவை தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி மாபெரும் வெற்றி காண்பதற்கான செயல்திட்டங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப் படும் என்று எதிர் காட்சிகள் தரப்பில் கூறப்படுகின்றது .

மேலும் மக்கள் கூட்டத்திற்கு பின்னர், தனிப்பட்ட முறையில் நடக்கவிருக்கும் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் 2024 மக்களவை தேர்தலில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்தும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது .
இந்தஒருங்கிணைந்த எதிர்க்கட்சிகளின் ஆலசோனை கூட்டத்தில் கலந்து கொள்ள, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி , தேசியவாத காங்கிரஸ் கட்சிதேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் தமிழ்நாடு முதல்அமைச்சரும் திமுக தலைவருமான முகஸ்டாலின், திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்காள மாநில முதல்மந்திரியுமான மம்தா பானர்ஜி, காஷ்மீர் முன்னாள் முதல்மந்திரியும் மக்கள்ஜனநாயக கட்சி தலைவருமான மெகபூபா முப்தி உள்ளிட்டோர் நேற்றே பாட்னா வந்தடைந்தனர் அவர்களை அம்மாநில விருந்தினர் மாளிகையில் தங்க வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.