கல்லணையிலிருந்து தண்ணீர் திறப்பு , 12 லட்சம் ஏக்கர் விலை நிலங்கள் பாசன வசதி பெறும்.

2 Min Read
அமைச்சர் கே என் நேரு

டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்காக கல்லணை திறக்கப்பட்டது. அமைச்சர்கள், ஆட்சி தலைவர், விவசாயிகள் கலந்து கொண்டு மலர்தூவியும் நெல்மணிகளை தூவியும் தண்ணீரை திறந்து வைத்தனர். இதன் மூலம் 12 லட்சம் ஏக்கர் விலை நிலங்கள் பாசன வசதி பெறும்.

- Advertisement -
Ad imageAd image

டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்காக நேற்று முன்தினம் மேட்டூர் அணை திறக்கப்பட்டது. திறக்கப்பட்ட தண்ணீர் இன்று அதிகாலை கல்லணை வந்தடைந்தது. இதனை அடுத்து தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்காக கல்லணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.

செய்தியாளர்கள் சந்திப்பு

இதில் அமைச்சர்கள் நேரு, மெய்யநாதன், மகேஷ் பொய்யாமொழி, டிஆர்பி ராஜா மற்றும் ஐந்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், விவசாய சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு மலர்களை தூவியும் – நெல்மணிகளை தூவியும் தண்ணீரை திறந்து வைத்தனர். திறக்கப்பட்ட தண்ணீர் மூலம் தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மாயவரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 12 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெரும் என குறிப்பிடத்தக்கது.

முதற்கட்டமாக காவிரியில் இருந்து 1500 கன அடியும், வெண்ணாற்றில் இருந்து 1,000 கன அடியும், கல்லணை கால்வாயில் 500 கன அடியும், கொள்ளிடத்தில் 400 கன அடியும் திறக்கப்பட்டுள்ளது. திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு படிப்படியாக உயர்த்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டெல்டா விவசாயிகள்

இதையடுத்து செய்தியாளர்களிடம் அமைச்சர் நேரு தெரிவித்தது:

இந்த தண்ணீர் மூலம் நிகழ் குறுவை சாகுபடிக்கும், நிலத்தடி நீர் உயர்வதற்கும், ஏரி, குளங்களை நிரப்புவதற்கும் பயன்படும்.

இதன் மூலம் டெல்டா மாவட்டங்களில் 7.95 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்ய வாய்ப்புள்ளது. கடந்த ஆண்டை விட கூடுதலான பரப்பளவில் சாகுபடி செய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. மேலும் கூடுதலாக கிடைக்கவுள்ள தண்ணீரை தேவைப்படும் அனைத்து ஆறுகளுக்கும் விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். காவிரி, வெண்ணாறு, கல்லணைக்கால்வாயில் கடைமடைப் பகுதி வரை தண்ணீர் சென்றடைவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

அமைச்சர் கே என் நேரு

கல்லணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீர் மூலம் டெல்டா மாவட்டங்களில் 7.95 லட்சம் ஏக்கரில் சாம்பார் சாதம் எப்படி செய்ய வாய்ப்புள்ளது. கடந்த ஆண்டை விட நிகழாண்டு கூடுதல் பரப்பளவில் சாகுபடி செய்ய வாய்ப்பு இருக்கிறது. மேலும் தற்போது நடைபெறும் குறுவை சாகுபடிக்கும் இந்தத் தண்ணீர் பயன்படும்.

சம்பா சாகுபடிக்கு தேவையான விதை, கூட்டுறவுத் துறை மூலம் பயிர்க்கடன், உரம் உள்ளிட்ட உதவிகள் செய்யப்படும். எனவே நிகழாண்டு அதிக விளைச்சல் கிடைக்கும்.

தற்போது காவிரியில் விநாடிக்கு 1.25 லட்சம் கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருப்பதால், ஒவ்வொரு கால்வாயிலும் தண்ணீரை அதிகப்படுத்தி விடப்படும். ஒரு வாரத்தில் கடைமடைப் பகுதிக்கு தண்ணீர் சென்றடையும்.

Share This Article
Leave a review