ஆன்லைன் தடைச்சட்டம் ஆளுநர் ஒப்புதல் பெற்ற இரண்டு வாரங்களுக்குள் , ஆன்லைன் சூதாட்டத்தின் மேல் இருக்கும் தடையை நீக்ககோரி , ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் சென்னை உயர் நீதி மன்றத்தை அணுகியுள்ளனர்.
தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டம் விளையாடி, பணத்தைத் தொலைத்து இதுவரை 40-க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் .
இந்த சூதாட்டத்தினால் மேலும் உயிரிழப்புகள் ஏற்படக்கூடாது என்ற குறிக்கோளோடு தமிழக சட்டசபையில் அணைத்து கட்சிகளின் ஆதரவோடு ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் நிறைவேற்றப்பட்டது . இதற்கு சமீபத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்தார் .
இந்த நிலையில் இதற்கு தடை விதிக்க கோரியும், ரத்து செய்யக் கோரியும், ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன.
நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் கலைமதி அமர்வில் காணொளி மூலம் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஆன்லைன் தடை சட்டத்திற்கு தடைகோரி முறையீடு செய்தார்.மேலும் இந்த வழக்கினை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார்.
அவரது முறையீட்டை கேட்ட நீதிபதிகள் , ஆன்லைன் நிறுவனங்கள் தாக்கல் செய்த மனு முறையாக இருந்தால் நாளை விசாரணைக்கு பட்டியலிடப்படும் என்றனர் . முறையாக இல்லாவிட்டால் சாதாரண வழக்கு பட்டியலில் தான் இடம்பெறும்” என்றும் தெரிவித்துள்ளனர் .