காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு,விற்பனையாளர்கள் யாரும் இல்லாமல் கடை திறக்கப்பட்டு வியாபாரம் செய்யப்பட்டது.

2 Min Read
  • காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு, மகாத்மா காந்தியின் நேர்மையை போற்றும் வகையில்..

காந்தி ஜெயந்தி  என்பது இந்தியாவின் தேசத் தந்தையான மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2ஐக் குறிக்கும் நாளாகும். இது இந்தியாவில் ஒரு தேசிய விடுமுறை நாளாகும். இந்நாள் ஆண்டுதோறும் இந்தியாவில் தேசிய மட்டத்தில் அக்டோபர் 2 அன்று கொண்டாடப்பட்டு வருகிறது. ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் ஜூன் 15, 2007இல் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் படி இந்நாள் “அனைத்துலக வன்முறையற்ற நாளாக அனைத்து நாடுகளிலும் கடைப்பிடிக்கப்பட்டு (அனுசரிக்கப்பட்டு) வருகிறது.

- Advertisement -
Ad imageAd image

காந்தி ஜெயந்தி ஆண்டுதோறும் அக்டோபர் 2 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இது இந்தியாவின் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட தேசிய விடுமுறை நாட்களில் ஒன்றாகும், இது இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் அனுசரிக்கப்படுகிறது.

காந்தி ஜெயந்தி அன்று புது தில்லியில் காந்தி தகனம் செய்யப்பட்ட நினைவு இல்லமான ராஜ் காட் உட்பட இந்தியா முழுவதும் பிரார்த்தனைகள், சேவைகள் மற்றும் அஞ்சலிகள் ஆகியவை நடத்தப்படுகிறது. கல்லூரிகள், உள்ளூராட்சி நிறுவனங்கள் மற்றும் சமூக-அரசியல் நிறுவனங்கள் வெவ்வேறு நகரங்களில் நினைவு விழாக்கள் மற்றும் பிரார்த்தனைக் கூட்டங்கள் போன்றவைகள் பிரபலமான நடவடிக்கைகளில் அடங்கும். ஓவியம் மற்றும் கட்டுரை போட்டிகள் நடத்தப்படுகின்றன மற்றும் பள்ளிகளிலும் சமூகத்திலும் அகிம்சை வாழ்க்கை முறையை ஊக்குவிப்பதோடு இந்திய விடுதலை இயக்கத்தில் காந்தியின் முயற்சியைக் கொண்டாடுவதற்கும் சிறந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.

காந்தியின் விருப்பமான பஜனைகள் (இந்து பக்திப் பாடல்), ரகுபதி ராகவ ராஜாராம் (பாடல்) பொதுவாக அவரது நினைவாக பாடப்படுகிறது. நாடு முழுவதும் மகாத்மா காந்தியின் சிலைகள் பூக்கள் மற்றும் மாலைகளால் அலங்கரிக்கப்படும். மேலும் சிலர் அன்றைய தினம் மது அருந்துவதையோ அல்லது இறைச்சி சாப்பிடுவதையோ தவிர்க்கிறார்கள். அரசு அலுவலகங்கள், வங்கிகள் மற்றும் அஞ்சல் நிலையங்கள் மூடப்பட்டிருக்கும் .

பாபநாசத்தில் கடையில் பொருட்களை விற்பனை செய்வதற்கு விற்பனையாளர்கள் யாரும் இல்லாமல், தேவையான பொருட்களை தானாக எடுத்து கொண்டு, அங்கிருந்த உண்டியலில் பணத்தை போட்டுச் சென்ற பொதுமக்கள்..

காந்தி ஜெயந்தி 156-வது விழாவை முன்னிட்டு நேர்மை விழிப்புணர்வு நாளை போற்றும் வகையில், பாபநாசம் ரோட்டரி சங்கம் சார்பில், பாபநாசம் பழைய பேருந்து நிலையத்தில் 25-ஆம் ஆண்டு கடையில் பொருட்கள் விற்பனை செய்வதற்கு, விற்பனையாளர்கள் யாரும் இல்லாமல் கடை திறக்கப்பட்டு வியாபாரம் செய்யப்பட்டது.

மகாத்மா காந்தியின் நேர்மையைப் போற்றும் வகையில் உண்மை, நாணயம், நம்பிக்கை நிறைந்த சுதந்திர இந்தியாவை உருவாக்க காந்தி கண்ட கனவை நினைவாக்கும் விதமாக அவர் பிறந்தநாளை நேர்மை விழிப்புணர்வு நாளாக உருவாக்கி விற்பனையாளர்கள் இல்லாத (ஆளில்லாத) கடையை வருடம் ஒருமுறை என, தொடர்ந்து 25-ஆண்டுகளாக பாபநாசம் ரோட்டரி சங்க நிர்வாகிகள் நடத்தி வருகின்றனர்.

இந்த ஆள் இல்லாத கடையில் வைக்கப்பட்டிருந்த பொருட்களில் தேவையான பொருட்களை எடுத்துக்கொண்ட பொதுமக்கள், தாங்கள் எடுத்துக் கொண்ட பொருள்களுக்கு உண்டான பணத்தை கடையில் வைக்கப்பட்டிருக்கும் உண்டியலில் போட்டு சென்றனர். மேலும் வீட்டு உபயோகத்திற்கு தேவையான பொருட்கள், புத்தகங்கள் போன்ற ஏராளமான பொருள்கள் விற்பனை செய்வதற்கு ஆளில்லாத கடையில் வைக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Share This Article
Leave a review