தீபாவளி பண்டு இரண்டு கோடிக்கு மேல் சுருட்டிக் கொண்டு ஓடிய கூட்டம்..!

3 Min Read

தீபாவளி பண்டு இரண்டு கோடிக்கு மேல் சுருட்டிக் கொண்டு ஓடிய கூட்டம் மனு கொடுத்து மண்டியிட்டு அழும் கிராம மக்கள். தீபாவளி என்றாலே இனிப்பு, பட்டாசு, புத்தாடைகள் தான் நினைவுக்கு வரும் அதைவிட மேலும் முக்கியமான ஒன்று நினைவுக்கு வரும் அதுதான் தீபாவளி பண்டு, கட்டி பணம் ஏமாந்த சம்பவம். ஒவ்வொரு தீபாவளிக்கும் இதை எதிர்பார்த்து காத்திருக்கலாம். தாங்கள் சிறுக சிறுக சேமித்து வைத்த பணத்தை ஒட்டுமொத்தமாக ஒரு கூட்டம் கொள்ளை அடித்து செல்லுவதை ஏற்றுக்கொள்ள முடியாத மக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தாவது அந்த நபரை கண்டுபிடித்து விடலாம் என்கிற ஆசையில் புகார் அளித்தும் பயனில்லாமல் போய்விடுவது வழக்கம்.

- Advertisement -
Ad imageAd image

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பகுதியில் சபரிவாசன் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வந்த மூன்று பேர் கொண்ட குழு சுற்றியுள்ள கிராமத்தில் தீபாவளி பண்டு பிடித்து சுமார் 2 கோடிக்கு மேல் ஏமாற்றிவிட்டு தலைமறைவான கதை, இப்போது விழுப்புரத்தில் நிகழ்ந்துள்ளது. விக்கிரவாண்டி பகுதியில் தினந்தோறும் தண்டல் வசூல் செய்கிற நிறுவனமாக துவங்கப்பட்ட சபரிவாசன் பைனான்ஸ் கிராமப்புறத்தில் உள்ள வியாபாரிகளுக்கு சிறு கடன்கள் வழங்கி தினம் தோறும் வசூல் செய்து வந்துள்ளது. இந்த நிலையில். திடீரென தீபாவளி பண்டு வசூல் செய்யலாம் என முடிவு செய்த அந்த நிறுவனம் நான்கு திட்டங்களை அறிமுகப்படுத்தியது.

எஸ்.பி அலுவலகம்

ஒரு திட்டம் மாதம் 500 ரூபாயும், அடுத்தொரு திட்டம் மாதம் 900 ரூபாயும், மேலும் ஒரு திட்டம் மாதம் 1500 ரூபாயும், தங்க நகைக்கான திட்டம் ரூபாய் 2750, மளிகை பொருட்களுக்கான திட்டம் ரூபாய் 350, என 10 மாதங்கள் வசூலிப்பது என திட்டமிட்டு வசூலித்துள்ளனர்.கடந்த ஆண்டு திட்டமிட்டபடி வசூலித்த பணத்தில் பொருட்கள் தங்க நாணயம் என முறையாக வழங்கி உள்ளனர். தீபாவளி பண்டு, அதை நம்பி இந்த ஆண்டு 500க்கும் மேற்பட்டோர் வெவ்வேறு திட்டங்களில் தங்களை இணைத்துக் கொண்டு முழு பணத்தையும் கட்டி விட்டனர். தீபாவளி நெருங்கும் வேளையில் அவர்களை தொடர்பு கொண்டால் அவர்களுடைய தொலைபேசி எண் தொடர்பு எல்லைக்கு வெளியே உள்ளது.

தீபாவளி பண்டு என்கிற பெயரில் பூஜை பொருட்கள்,சமையல் பொருட்கள், மசாலா வகைகள், அரிசி வகைகள், மாவு பொருட்கள், இனிப்பு வகைகள் என பல பொருள்களை தருவதாக கூறி, பெண்களை கவர்ந்து உள்ளனர். அது மட்டும் அல்லாமல் தங்க நாணயம், வெள்ளி நாணயம் போன்றவற்றையும் வழங்குவதாக பாமர மக்களை ஏமாற்றி உள்ளனர். இதுவரை அவர்கள் வசூல் செய்த தொகை இரண்டு கோடிக்கு மேல் இருக்கும் என்கிறார்கள். அந்த அப்பாவி மக்கள் இது தொடர்பாக எஸ். பி அலுவலகத்தில் புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனக் கூறி, எஸ்.பி அலுவலகத்தின் வாசலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர் கிராம மக்கள்.

பொதுமக்கள் போராட்டம்

பணம் கட்டி ஏமாந்த ஒரு நபர் அந்த ஏஜென்டின் காலில் விழுந்து எப்படியாவது பணத்தை கொடுக்க வேண்டும் என்று கெஞ்சிய சம்பவம் நெஞ்சை உருக வைத்து விட்டது. எப்படியும் பணம் ஏமாற்றிவிட்டு சென்றவர்கள் கிடைக்கப் போவதில்லை கிடைத்தாலும் அவர்கள் இவர்களிடம் வசூல் செய்த பணத்தை கொடுக்கப் போவதில்லை, ஆனாலும் போராடி பார்ப்போம் என்று போராடுகிறார்கள்.ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி நேரத்தில் இப்படி ஏமாறுகிறவர்கள். அதிகமாய் கொண்டே போனாலும் கூட விழிப்புணர்வு அடையவில்லை, மக்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

Share This Article
Leave a review