தர்ம யுத்தம் என்னும் பேரில் மக்களை ஏமாற்றி திரிந்த ஓ.பன்னீர் செல்வத்துக்கு உச்சநீதிமன்றம் ஒரு மரண அடி அளித்துள்ளது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி. உரிமை மீட்பு மாநாடு மக்களை ஏமாற்றும் விஷயம், அவர்கள் ஆட்சி செய்த காலத்திலேயே மக்களுக்கு நிதியை பெற்று தராத அரசருக்கு எதற்கு உரிமை மீட்பு மாநாடு?
திமுக பாஜகவிற்கு கொத்தடிமையாக வேலை செய்து ரகசிய பேச்சுவார்த்தைகள் மேற்கொண்டு வருகின்றனர். இது ஒரு நாள் கண்டிப்பாக வெளிச்சத்திற்கு வரும் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை கழக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.

எடப்பாடி பழனிசாமி தலைமையில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் 2 கோடி தொண்டர்கள் எழுச்சியுடன் இருப்பதை பொறுத்துக் கொள்ள முடியாமல் எப்படியாவது ஊடுருவ வேண்டும். அது ஏதேனும் ஆதாயம் கிடைக்குமா எண்ணத்துடன் உயர் நீதிமன்றத்தை பலமுறை அணுகி நீதிமன்றத்தில் குத்து வாங்கிக் உள்ளார். அப்போது ஓ.பி.எஸ் அளித்த மேல் முறையீடுகளுக்கு உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பினை இன்று உச்சநீதிமன்றம் உறுதி செய்து சரியான தீர்ப்பை வழங்கியுள்ளது.
தர்ம யுத்தம் என்னும் பேரில் மக்களை ஏமாற்றி திரிந்த ஓ. பன்னீர் செல்வத்துக்கு உச்சநீதிமன்றம் ஒரு மரண அடி அளித்துள்ளது. இந்த தீர்ப்பை பொதுமக்களும் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தொண்டர்களும் மகிழ்ச்சியாய் எடுத்துக் கொள்வதை அனைவரும் காணலாம். இனி எந்த வகையிலும் ஓ.பி.எஸ் அண்ணா திமுக கறை படிந்த வேட்டியை உடுத்த முடியாது. அதை இரட்டை இலையை பயன்படுத்த முடியாது. இது அவர்களுக்கு சரியான பாடம், ஆளும் கட்சியின் அதிகார துஷ்பிரயோகம் காட்சி நடத்தப்பட்டு வருகிறது.

திமுகவை சேர்ந்தவர்கள் என்ன தவறு செய்தாலும் எங்களை காப்பாற்ற அமைச்சர்கள் இருக்கிறார்கள், முதல்வர் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் அடிக்கடி இவர்களால் நடைபெற்று வருகிறது. இந்த சட்டத்தை குறித்து எந்த விதத்திலும் கவலைப்படாத இந்த திமுக உரிமை மீட்பு மாநாடு நடத்துகிறது. அனேக துரை சார்ந்தவர்கள், நெசவாளர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், அரசு ஊழியர்கள் லிட்டர் போராடி வருகிறார்கள்.
இப்படி எதுவும் கண்டுக்காமல் இருக்கும் முதலமைச்சர் தமிழகத்திற்கு கிடைத்தது ஒரு வேதனைக்குரிய விஷயம், பல்லாவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரின் மகன் பட்டியல் இனத்தை சேர்ந்த மாணவியை துன்புறுத்திய சம்பவம் கண்டிக்கத்தக்கது. இந்த மாணவியை துன்புறுத்திய பல்லாவரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மற்றும் மகன் மீது உடனடியாக நடைமுறைக்கு எடுக்க வேண்டும்.

அந்தப் பெண்ணின் குடும்பத்தாருக்கு மிரட்டல் விடுவிக்கும். அதில் சம்பந்தம் உடைய அனைவரும் மீதும் உடனடியாக காவல்துறை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். உரிமை மீட்பு மாநாடு மக்களை ஏமாற்றும் விஷயம், அவர்கள் ஆட்சி செய்த காலத்திலேயே மக்களுக்கு நிதியை பெற்று தராத அரசருக்கு எதற்கு உரிமை மீட்பு மாநாடு? மத்திய அரசுக்கு தார வார்த்து கொடுத்த மாநாடு என்று பெயரை மாற்றிக் கொள்ளுங்கள் என்றனர்.
இது பதவி ஏற்பு மாநாடு தான் அதற்கு பட்டாபிஷேகம் செய்யும் மாநாடு நடத்துகிறார்கள் தவிர இது உரிமை மீட்பு மாநாடு அல்ல. அதிமுக பாஜகவில் விலகி அடுத்த மாதத்திலேயே கலைஞர் மதவாத சக்தியுடன் கூட்டணி வைத்துக் கொள்ள மாட்டோம் என்று ஐந்தாண்டு கூட்டணியில் ஆட்சி செய்தார்கள்.
இன்று கொத்தடிமைகளாக ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி உங்களின் ஆதரவை கொடுத்து வருகிறார்கள். கண்டிப்பாக இது ஒரு நாள் வெளிச்சத்திற்கு வரும், எடப்பாடி தலைமையேற்று பின்பு வேறு கட்சியில் இருந்து இன்று இங்கு வந்து இணைந்து வருகிறார்கள்.