புதுவையில் தேஜ கூட்டணிக்கு எதிராக நூதனப் போராட்டம் நடத்திய சமூக ஆர்வலர் மீது நள்ளிரவு கல் வீசி தாக்குதல் நடத்திய மர்ம ஆசாமியை உருளையன்பேட்டை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலரான சுந்தர்ராஜன். இவர் சில தினங்களுக்கு முன்பு புதுச்சேரி முருங்கப்பாக்கத்தில் கடலூர் மெயின் ரோட்டில் நடுரோட்டில் படுத்து கொண்டு மழை நீர் தேங்கிய பள்ளத்தில் தாமரை பூவே மலர விட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது இது தான் குஜராத் மாடல் ரோடுங்க என்று புதுவையில் நடைபெறும் தேச கூட்டணி அரசுக்கு எதிரான விமர்சனத்தை முன் வைத்தார்.

இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு தனது பணியை முடித்துக் கொண்டு சுந்தர்ராஜன் நெல்லித்தோப்பு சுப்பையா சிலை லெனின் வீதியில் நடந்து சென்றுள்ளார். அப்போது 35 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் பெரிய கருங்கல்லுடன் சுந்தர்ராஜனை தாக்க வரவே அவ்வழியாக சென்ற பொதுமக்கள் கூச்சலிடமே சுதாகரித்துக் கொண்ட வேறு பக்கமாக சற்று நகர்ந்து திரும்பி உள்ளதால் வீசிய கருங்கல் சுந்தரராஜனின் முதுகில் விழுந்து காயம் ஏற்பட்ட நிலையில் அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட போது கொலை மிரட்டல் விடுத்து விட்டு ஆசாமி பைக்கில் தப்பி ஓடிவிட்டார்.

இதனை கண்ட பொதுமக்கள் போலிசீல் தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் உருளையன் பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காவலர்கள் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் காயம் அடைந்த சுந்தர்ராஜனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் சுந்தர்ராஜனை உட்புற நோயாளியாக சேர்க்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
புதுச்சேரியில் நடக்கும் சில அநீதிகளை சுந்தரராஜன் துணிச்சலோடு பொதுமக்களுக்கு சுட்டி காட்டிய நிலையில் அவர் மீது மர்ம நபர் தாக்குதல் நடத்தி உள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் மீது கருங்கல் வீசி கொலை மிரட்டல் விடுத்த ஆசாமி யார்? என்பது தொடர்பாக காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.