தென் மாவட்டங்களில் வரலாறு காணாத கனமழை: மீட்புக்கு கூடுதல் ஹெலிகாப்டர்கள் தேவை என முதலமைச்சர் கடிதம்

1 Min Read

மீட்புப்பணிக்கு கூடுதல் ஹெலிகாப்டர்களை அனுப்பக்கோரி மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்குக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

- Advertisement -
Ad imageAd image

இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், “தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. சில இடங்களில் 1871ஆம் ஆண்டுக்குப் பிறகு அதிக மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.

இதன் காரணமாக, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் வசிக்கும் சுமார் 40 லட்சம் மக்கள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக ஸ்ரீவைகுண்டம் மற்றும் தூத்துக்குடி நகரங்களில், தாமிரபரணி ஆற்றில் அதிக வெள்ளப்பெருக்கு மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.

மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள எங்கள் அதிகாரிகள், SDRF மற்றும் NDRF குழுக்களை நாங்கள் திரட்டியுள்ளோம். தமிழகம் முழுவதும் இருந்து நிவாரணப் பொருட்கள் குவிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், இணைப்புச் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியதால், இப்பொருட்களை மக்களுக்கு வழங்க முடியவில்லை.

கனமழை

ஹெலிகாப்டர்கள் மூலம்தான் அவர்களை அடைய முடியும். தற்போது விமானப்படையின் 4 ஹெலிகாப்டர்களும், கடற்படையின் 2 ஹெலிகாப்டர்களும், கடலோர காவல்படையின் 2 ஹெலிகாப்டர்களும் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்பதற்காகவும், மாயமானவர்களுக்கு உணவுப் பொருட்களை எடுத்துச் செல்லவும் அனுப்பப்படுகின்றன.

பேரழிவின் மகத்தான தன்மை மற்றும் அதிக எண்ணிக்கையிலான குடியிருப்புகள் மூடப்பட்டிருப்பதால், மீட்பு மற்றும் நிவாரண விநியோகத்திற்காக எங்களுக்கு அதிக ஹெலிகாப்டர்கள் தேவை. எனவே, அதிகபட்ச ஹெலிகாப்டர்களை உடனடியாக நிலைநிறுத்த உங்கள் அவசரத் தலையீட்டைக் கோருகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Share This Article
Leave a review