இந்திய கிரியேட்டர்களும் டிவிட்டர் தளத்தில் இருந்து வருமானம் பெற துவங்கியுள்ளனர். முதல் முறையாக டிவிட்டரில் இருந்து பணத்தை பெற்றவர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் வங்கி கணக்கில் வந்த பணத்தின் ஸ்கிரீன்ஷாட்-ஐ டிவிட்டர் தளத்திலேயே பகிர்ந்துள்ளனர். பேஸ்புக், யூடியூப் தளத்தில் பல வருடங்களாக இருந்து வரும் விளம்பர
வருவாய் பகிர்வு திட்டம் கடந்த மாதம் எலான் மஸ்க் தலைமையிலான டிவிட்டர் (X தளம்) ad revenue-sharing திட்டத்தை தனது தளத்தின் கன்டென்ட் கிரியேட்டர்களுக்கு அறிமுகம் செய்தது.
இந்த திட்டத்தின் வாயிலாக பலர் வருமானம் பெற துவங்கியுள்ளனர், டிவிட்டரில் இருந்து யாருக்கெல்லாம் வருமானம் கிடைக்கும். அடிப்படை தகுதி என்ன.? என்பதை இப்போது பார்ப்போம்.
யார் தகுதியானவர்?:
டிவிட்டரின் விளம்பர வருவாய் பகிர்வு திட்டத்திற்கு பரிசீலிக்க, உங்கள் கணக்கு பின்வரும் நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டியது கட்டாயம்.
- ப்ளூ டிக் அல்லது சரிபார்க்கப்பட்ட நிறுவனங்கள் கணக்காக இருக்க வேண்டும்.
- கடந்த மூன்று மாதங்களில் ஒட்டுமொத்த பதிவுகளுக்கு குறைந்தது 15 மில்லியன் இம்ப்ரெஷன் ஆதாவது பார்வையாளர்களை பெற்று இருக்க வேண்டும்.
- கணக்கில் குறைந்தது 500 பாலோவர்களையாவது வைத்திருக்க வேண்டும்.
- உங்கள் கணக்கு இந்த நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தால், உங்களிடம் ஸ்ட்ரைப் கணக்கு (Stripe account) கட்டாயம் இருக்க வேண்டும்.
மேலும் Stripe என்பது X தளத்தில் கட்டணச் செயல்பாட்டு நிறுவனமாக விளங்குகிறது. இதை தாண்டி ஒவ்வொரு கன்டென்ட் கிரியேட்டரும் X தளத்தின் விளம்பர வருவாய் பகிர்வு விதி முறைகளையும் பின்பற்ற வேண்டும். உதாரணமாக Creator Monetization Standards, X Rules ஆகியவை இதில் அடங்கும்.
பேமெண்ட் எப்படி செயல்படுகிறது:
உங்கள் டிவிட்டர் கணக்கு மேலே உள்ள அடிப்படை தகுதிகளை பூர்த்தி செய்திருந்தால், ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்ட் X செயலியில் உள்ள Monetization பிரிவில் இருக்கும் வழிமுறைகளை பின்பற்றி ஸ்ட்ரைப் கணக்கை உருவாக்கிடுங்கள். இந்த ஸ்ட்ரைப் கணக்கில் தான் டிவிட்டர் உங்களுக்கான வருவாய் பங்கீட்டை கொடுக்கும்.
இந்த கணக்கில் இருக்கும் பணத்தை நீங்கள் பயன்படுத்தும் பிற வங்கி கணக்குகளுக்கு மாற்ற முடியும். ஸ்ட்ரைப் கணக்கை திறந்து தயாராகும் பட்சத்தில் ஒரு மாதத்தில் நீங்கள் 50 டாலர் அளவிலான வருவாய் ஈட்டியிருந்தால், வழக்கமான நாட்களில் பேமென்ட் கிடைக்கும். இல்லையெனில் ஒவ்வொரு மாதமும் கணக்கு வைத்துக்கொண்டு 50 டாலர் வருமானம் பெற்ற பின்பு கிரெடிட் செய்யப்படும். இதேவேளையில் நீங்கள் நிபந்தனைகளை பூர்த்தி
செய்யவில்லை என்றால் குறிப்பாக X பிரீமியம் சப்ஸ்கிரிப்ஷன் பெறாத பட்சத்தில் உங்களுக்கான விளம்பர வருவாய் பங்கீட்டை எக்ஸ் வைத்திருக்கும்.
நீங்கள் X பிரீமியம் (ப்ளூ டிக்) சப்ஸ்கிரைபராக இல்லாவிட்டால், விளம்பரப் பணம் X நிறுவனம் உங்களுக்கான அக்கவுன்ட்-ல் சேமித்து வைத்திருக்கும் என எலான் மஸ்க் டிவீட் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் X பிரீமியம் (ப்ளூ டிக்) சப்ஸ்கிரைபராக இருந்தால் மட்டுமே வருமானம் ஈட்ட முடியும் என்பது அடிப்படை கண்டிஷன் ஆக உள்ளது.