பதவி மற்றும் சுயநலத்திற்காக இல்லை. அதிமுகவை மீட்பதற்காகவே இணைந்தோம்.! ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன்.!

3 Min Read
டிடிவி தினகரன் சசிகலா ஓபிஎஸ்

2 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்றாக தேனி மேடையில் தோன்றிய ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன். பதவி மற்றும் சுயநலத்திற்காக நாங்கள் ஒன்றினையவில்லை. அதிமுகவை மீட்பதற்காகவே ஒன்றினைந்தோம் என டிடிவி தினகரன் பேச்சு.

- Advertisement -
Ad imageAd image

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கொடநாடு பங்களா கொள்ளை வழக்கை விரைந்து விசாரிக்க ஓ பி எஸ் அணியினர் சார்பில் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த ஆர்ப்பாட்டங்களில் அமமுக தொண்டர்கள் பங்கேற்பார்கள் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அறிவித்திருந்தார்.

அதன் தொடர்ச்சியாக தேனி மாவட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில்  நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அமமுக
பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பங்கேற்று கண்டன உரையாற்றினார்.‌ தேனி பங்களாமேடு பகுதியில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில்,  அமமுக மற்றும் ஓ‌.பி.எஸ் அணியை சேர்ந்த நகர், ஒன்றியம் பேரூர், சார்பு அணி மற்றும் தலைமைக்கழக நிர்வாகிகள்,  உறுப்பினர்கள் என 2500 க்கு மேற்பட்டோர் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் டிடிவி தினகரன் பேசுகையில்,  90 சதவீதம் தொன்டர்கள் ஓபிஎஸ் மற்றும் எங்கள் பின்னால் உள்ளனர். கொடநாடு காவலாளி கொலை வழக்கில் தொடர்புடையவர்கள்
மற்றும் அதில் தொடர்புடையவரை தற்கொலைக்கு தூன்டியவர்களை கைது செய்ய வேண்டும். கொட நாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் தொடர்புடையவர்கள் யார் என்று உங்களுக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரியும். மூன்று மாதத்தில் கொட நாடு குற்றவாளிகளை சிறையில் அடைப்போம் என்று தேர்தலில் கூறினார்கள்.

ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் தான்டி விட்டது. இந்த வாக்குறுதியை மறந்து விட்டார். சட்டமன்றத்தில் கொட நாடு குற்றவாளிகளை நெருங்கிவிட்டோம் என்று கூறினார்கள்.
உன்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டு என ஓபிஎஸ் அவர்கள் ஆர்ப்பாட்டத்தை அறிவித்தார். அவர் அழைக்க வேண்டும் என்று இல்லை,  நாங்களாகவே இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும். அதனாலேயே நானே இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டேன். ஓபிஎஸ் தொண்டர்களும்,  அமமுக தொண்டர்களும் வருத்தங்களை மறந்து ஒன்றினைந்துள்ளோம். அம்மா என்ற மையப்புள்ளியில் இருப்பவர்கள் அனைவரும் தற்போது ஒன்றினைந்து விட்டோம்.

இங்கு இருப்பவர்கள் தான் தொண்டர்கள், அங்கு இருப்பவர்கள் குண்டர்கள். அவர்களுக்கு விஸ்வாசம் என்பது தெரியாது. நாங்கள் இருவரும் இணைந்து இருப்பது பதவிக்காக அல்ல சுயநலத்திற்காக அல்ல. ஓபிஎஸ் மூன்று முறை முதல்வராக இருந்தவர். எம்ஜிஆர் உருவாக்கிய கட்சியை அவர்களிடம் இருந்து மீட்பதற்காகவே நாங்கள் இருவரும் ஒன்றினைந்துள்ளோம். கொட நாடு குற்றவாளிகளை இந்த அரசு உடனடியாக கைது செய்ய வேண்டும் என்பதற்காகவே இந்த கண்டன கூட்டம் நடக்கிறது என பேச்சை நிறைவு செய்தார்.

பின்னர் ஓபிஎஸ் பேசுகையில், கொட நாடு குற்றவாளிகளை இந்த அரசு உடனடியாக கைது செய்ய வேண்டும் என்பதற்காகவே இந்த கண்டன கூட்டம் நடக்கிறது. கொட நாடு கொலை கொள்ளை வழக்கை விரைந்து நடத்தி குற்றவாளிக்கு  தண்டனையை பெற்று தர வேண்டும். நாம் அனைவரும் மக்கள் செல்வர் என அன்போடு அழைக்கும் “டி.டி.வி.தினகரன் சார்” இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வருகை தந்திருக்கிறார் அவருக்கு எங்கள் நன்றி. மூன்று மாதங்களில் கொட நாடு குற்றவாளிகளை கைது செய்வோம் என்று கூறி தான் தற்போதைய முதல்வர் ஆட்சிக்கு வந்தார். முப்பது மாதங்களில் இந்த வழக்கை அதல பாதாளத்திற்கு தள்ளிவிட்டனர்.

நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழகம் முழுவதும் போராட்டம் நடக்கும். கொட நாடு சம்பவம் நடைபெற்ற அன்று அங்கு மின்சாரத்தை துண்டித்தது யார்? என்று கேள்வி எழுப்பினார்.
இந்த பிரச்சினை மக்களுடைய கவனத்திற்கு கொண்டு வந்துள்ளோம். இந்த விவகாரத்தில் நீதி தாமதமானால் மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என்று பேசிய பின்னர் முழக்கங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

1999 ஆண்டு டிடிவி தினகரன் தேனி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட சமயம் அறிமுக கூட்ட நிகழ்வில் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஒரே மேடையில் தோன்றினர். அதற்கு பின்னர் ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தார் டிடிவி தினகரன். ஜெயலலிதா மறைவிற்கு பிறகே மீண்டும் அரசியலுக்கு வந்தார். தர்ம யுத்தம் நடத்திய சமயத்தில் டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் – க்கு இடையே கருத்து வேறுபாடு இருந்த நிலையில் 22 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று தேனியில்
நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் இருவரும் ஒரே மேடையில் தோன்றியது குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a review