போதைப்பொருள் வைத்திருந்த வட மாநில தொழிலாளி கைது..!

2 Min Read

சென்னை வடபழனியில் இருந்து பூவிருந்தவல்லியில் போதைப்பொருள் வைத்திருந்து மெட்ரோ ரயில் பணியில் ஈடுபட்ட வட மாநில தொழிலாளி கைது.

- Advertisement -
Ad imageAd image

சென்னை மாவட்டம், வடபழனியில் இருந்து பூவிருந்தவல்லி வரை மெட்ரோ ரயில் 2-ம் கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. இதில் ஏராளமான வட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் மெட்ரோ ரயிலில் பணி புரிந்து வருகின்றனர். பூவிருந்தவல்லியில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் திட்டப் பணிகளில் ஈடுபட்டு வந்த அசாம் வட மாநிலத்தைச் சேர்ந்த அனுருல்லாஹ் வயது (33), முஜிபுர் ரஹ்மான் வயது (44) என்ற ஆகிய இரு தொழிலாளர்களிடம் போதைப் பொருள் இருப்பதாக பூந்தமல்லி போலீசாருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது.

போதைப்பொருள் வைத்திருந்த வட மாநில தொழிலாளி

இதனை தொடர்ந்து, பூவிருந்தவல்லி பேருந்து நிலையம் அருகே பணியில் ஈடுபட்டிருந்த இவர்கள் இருவரிடமும் போலீசார் பிடித்து விசாரித்தனர். இவர்களை விசாரித்த போலிசார் விசாரணையில் ரூபாய் 30,000 மதிப்புள்ள மெஸ்கலைன் என்ற போதை பவுடர் பொருள் அனுருல்லாஹிடம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை அடுத்து பூந்தமல்லி காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்த போலீசார் அவரிடமிருந்து அந்த மெஸ்கலைன் என்ற போதைப் பொருளை பறிமுதல் செய்து விசாராணை நடத்தி மேற்கொண்டு வருகின்றனர்.

போதைப்பொருள்

இந்த மெஸ்கலைன் என்ற போதை பொருளை எரிப்பதால் வரும் புகையை மனிதர்கள் சுவாசிப்பதால் போதை ஏற்படும் என்றும், இந்த பவுடரை திரவமாக்கி ஊசி மூலம் செலுத்துவதாலும் போதை ஏற்படும் என்று கூறப்படுகிறது. இதில் அனுருல்லாஹ் என்பவர் வட மாநிலங்களில் இருந்து அந்த போதைப் பொருளை கடத்தி வந்து, இங்குள்ள வட மாநில தொழிலாளர்களுக்கும், கல்லூரி படிக்கும் மாணவர்களுக்கும் விற்பனை செய்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

பூந்தமல்லி காவல் நிலையம்

இது குறித்து வட மாநில தொழிலாளி மீது வழக்கு பதிவு செய்த பூந்தமல்லி மது விலக்கு போலீசார் அனுருல்லாஹை கைது செய்து, பூவிருந்தவல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அனுருல்லாஹ்வை புழல் சிறையில் அடைத்தனர்.

Share This Article
Leave a review