வட இந்தியாவின் பல பகுதிகளில் பெய்த கனமழையால், கடந்த மூன்று நாட்களில் 28க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
நகரங்களின் , பல சாலைகள் மற்றும் கட்டிடங்கள் முழங்கால் அளவு நீரில் மூழ்கியுள்ளன.
இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், ஹரியானா, ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது .
காகிதப் படகுகள் போல் மிதக்கும் வாகனங்கள், குடியிருப்புப் பகுதிகளுக்குள் சேறும் சகதியுமான நீர், கரைபுரண்டு ஓடும் ஆறுகள் உள்ளிட்ட புகைப்படங்கள் பாதிக்கப்பட்ட பொதுமக்களால் அதிக அளவில் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டுவருகின்றன . இது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

இமாச்சலப் பிரதேசத்தில், நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளம், இடைவிடாத மழையால் வீடுகள், கட்டமைப்புகள் சேதமடைந்து இயல்பு வாழ்க்கை முடங்கி காணப்படுகின்றது .
ரவி, பியாஸ், சட்லுஜ், ஸ்வான் மற்றும் செனாப் உட்பட அனைத்து முக்கிய ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் மணாலி, குலு, கின்னவுர் மற்றும் சம்பா ஆகிய நகரங்களில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் பல கடைகள் மற்றும் வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன.
முன்னெச்சிரிக்கை நடவடிக்கையாக அடுத்த 24 மணி நேரத்திற்கு மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு வேண்டுகோள் விடுத்துள்ளார். “அடுத்த 24 மணி நேரத்திற்கு மிக கனமழை எதிர்பார்க்கப்படுவதால், அனைவரும் பாதுகாப்பாக இருக்கமாறு கேட்டுக்கொள்கிறேன் .
மீட்பு மற்றும் புகார்களுக்காக நாங்கள் 1100, 1070, 1077 ஆகிய மூன்று ஹெல்ப்லைன்களைத் தொடங்கியுள்ளோம். பேரிடரில் சிக்கியவர்கள் , மற்றும் சேதங்கள் தொடர்பான தகவலைப் பகிர்ந்து கொள்ள இந்த எண்களை அழைக்கலாம். உங்களுக்கு உதவ நான் 24 மணி நேரமும் தயாராக இருக்கிறேன்,” என்று அவர் ஒரு வீடியோ செய்தியில் முதல்வர் சுக்விந்தர் சிங் தெரிவித்துள்ளார் .

இதுவரை சாலை விபத்துகள் மற்றும் வெள்ள பாதிப்பால் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளம் காரணமாக உயிர் இழப்புகள் அதிகமாக இல்லை.மாநிலத்தில் உள்ள முக்கிய தேசிய நெடுஞ்சாலைகள், மாவட்டம், இணைப்புச் சாலைகள் உட்பட 1,300க்கும் மேற்பட்ட சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளன. அடுத்த இரண்டு நாட்களுக்கு நாங்கள் உஷார் நிலையில் இருக்கிறோம்” என்று இமாச்சல பிரதேச அமைச்சர் ஜகத் சிங் நேகி தெரிவித்திருக்கிறார் .
அண்டை மாநிலமான உத்தரகாண்டிலும் நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகவும், ஆறுகள் மற்றும் ஓடைகளில் நீர்மட்டம் அபாயக் கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக குர்கான் மற்றும் டெல்லியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, கார்ப்பரேட் நிறுவனங்கள் இன்று வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு அம்மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.
ஹத்னிகுண்ட் தடுப்பணையில் இருந்து ஹரியானா யமுனை ஆற்றில் ஒரு லட்சம் கனஅடி நீரை திறந்துவிட்டதையடுத்து, வெள்ளம் பாதித்த பகுதிகளை கண்காணிக்க டெல்லி அரசு 16 கட்டுப்பாட்டு அறைகளை அமைத்துள்ளது.
ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் ஹரியானாவின் பல பகுதிகளில் பெய்த கனமழையால் நீர்நிலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டது, மோசமான பாதிப்புக்குள்ளான இடங்களில் அதிகாரிகள் மீட்பு நடவடிக்கைளில் ஈடுபட்டு வருகின்றனர் .
ஜம்மு காஷ்மீரின் கதுவா மற்றும் சம்பா மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கன மழையால் அதிக பாதிப்பு ஏற்படக்கூடும் என்று கணிக்கப்பட்டுளாதால் , பொதுமக்கள் பாதுகாப்பை இருக்குமாறு அந்தந்த மாநில அரசுகள் கோரிக்கை விடுத்துள்ளனர் .