சனாதனத்தை எதிர்க்கிற திமுக சமாதனத்தில் சொல்லப்பட்டுள்ள குலத் தொழிலை பின்பற்றுகிறது. இனி எந்த காலத்திலும் பிஜேபியுடன் கூட்டணி இல்லை. இது தொண்டர்கள் எடுத்த முடிவு. முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் பேச்சு.
விழுப்புரத்தில் நேற்று அதிமுக கட்சி தொடங்கி 52 வது ஆண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுகூட்டத்தில் பேசிய முன்னாள் சட்ட அமைச்சர் சிவி சண்முகம் அவர்கள் ’’இனி எந்த சூழ்நிலையிலும் பாஜகவுடன் அதிமுக உறுதியாக கூட்டணியில் இருக்காது. நாடாளுமன்றத் தேர்தலில் மட்டுமல்ல, 2026-ல் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இருக்காது” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் கூறியுள்ளார்.
இ ந்த பொதுகூட்டத்தில் காவிரி பிரச்சனையில் கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் பிஜேபி ஆகிய கட்சிகள் தமிழ்நாட்டு மக்களுக்கு தண்ணீர் தர மறுக்கிறது. அதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர திமுக தயங்குகிறது.

மேலும் சனாதனத்தை எதிர்த்து பேசும் திமுக சனாதன கொள்கையில் உள்ள குலத்தொழில் அடிப்படையில் முதல்வர் பொறுப்பை ஏற்று வருகின்றது . திமுக சரித்திரம் உதயநிதி ஸ்டாலின் என்ன தெரியும் ஸ்டாலினுக்கே அது தெரியாது. அதிமுகவை தவிர இந்தியாவில் இருக்கிற எல்லா கட்சிகளும் பிராடு கட்சிகள் என முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார்.
திமுக அமைச்சர்கள் கோடிட்ட இடத்தை நிரப்புகிற வேலையை தான் செய்து வருகிறார்கள். திமுக ஆட்சி விரைவில் சீரழிந்து போக போகிறது சிவி சண்முகம் தனது உரையில் தெரிவித்தார்.சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு போய் உள்ளது. திமுக ஆட்சியில் கூட்டு பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளன.

கஞ்சா போதை சாக்லேட் போன்ற பிரச்சனைகள் தலைவிரித்தாடுகின்றன. நரேந்திர மோடி அரசின் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர் எடப்பாடி. என்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பெருமையுடன் பேசினார். கூட்டத்தின் முடிவில் கூட்டத்திற்கு வந்திருந்த மகளிர்க்கு இலவச புடவைகள் வழங்கப்பட்டது அப்போது தள்ளு முள்ளு ஏற்பட்டு, அப்பகுதி பெரும் பரபரப்பு ஏற்பட்டது.