கடலூர் துறைமுகத்தில் 5-ம் எண் புயல் எச்சரிக்கைக்கு கூண்டு ஏற்றம்..!

2 Min Read

புயல் காரணமாக பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடல் பகுதிக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

- Advertisement -
Ad imageAd image

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு `மிக்ஜம்’ என பெயரிடப்பட்டு உள்ளது. சென்னையில் இருந்து 150 கிலோ மீட்டர் கிழக்கு திசையில் புயல் நிலை கொண்டுள்ளது. இது நெல்லூர்- மசூலிப்பட்டினம் இடையே நாளை மாலை கரையைக் கடக்கும். அப்போது, அதிகபட்சமாக மணிக்கு 80 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் புயலாக கரையை கடக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் புதுச்சேரிக்கு கிழக்கு-வடகிழக்கே சுமார் 230 கி.மீ., சென்னைக்கு கிழக்கு-தென்கிழக்கே 190 கி.மீ., நெல்லூருக்கு தென்கிழக்கே 310 கி.மீ., பாபட்லாவில் இருந்து 410 கி.மீ. தென்-தென்கிழக்கே, மச்சிலியப்பட்டினத்திலிருந்து 430 கி.மீ. தூரத்தில் நகர்ந்து வரும் நிலையில் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, மேலும் தீவிரம் அடைந்து இன்று தெற்கு ஆந்திரா மற்றும் அதை ஒட்டிய வட தமிழக கடற்கரையை ஒட்டி மேற்கு மத்திய வங்கக்கடலை அடையும். அதன்பிறகு, இது கிட்டத்தட்ட வடக்கு நோக்கி இணையாகவும், தெற்கு ஆந்திரப் பிரதேசக் கடற்கரைக்கு நெருக்கமாகவும் நகர்ந்து, நெல்லூர் மற்றும் மச்சிலிப்பட்டினம் இடையே தெற்கு ஆந்திரப் பிரதேசக் கடற்கரையை நாளை மதியம் ஒரு கடுமையான சூறாவளி புயலாகக் கடக்கும் அந்த நேரத்தில் அதிகபட்சமாக 90-100 கி.மீ வேகத்தில் மற்றும் 110 கி.மீ வேகம் வரை காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல்

இந்த நிலையில் மிக்ஜாம் புயல் கடலூர் துறைமுகத்தின் இடது பக்கமாக கரையை கடந்து செல்லும் என எதிர்பார்க்கும் நேரத்தில் துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படும் என்பதை குறிக்கும் வகையில் கடலூர் துறைமுகத்தில் 5-ம் எண் புயல் எச்சரிக்கைக்கு கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. புயல் காரணமாக பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடல் பகுதிக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கப்பல்களுக்கும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Share This Article
Leave a review