அலகாபாத் உயர்நீதிமன்றம் திங்கள்கிழமை நிதாரி கொலையில் முக்கிய குற்றவாளிகளான சுரேந்திர கோலி (40) மற்றும் அவரது முன்னாள் முதலாளி மொனிந்தர் சிங் பாந்தர் (65) ஆகியோரின் மரண தண்டனையை ரத்து செய்து விடுதலை அளித்தது .
2006 ம் ஆண்டு கோலிக்கு எதிராக தொடரப்பட்ட 12 கொலை வழக்குகள் மற்றும் பாந்தர்க்கு எதிராக தொடரப்பட்டஇரண்டு கொலை வழக்குகளிலிருந்து அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக பாந்தரின் வழக்கறிஞர் மனிஷா பண்டாரி தெரிவித்தார்.
பாலியல் பலாத்காரம், கொலை, சாட்சியங்களை அழித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் தொடரப்பட்ட இந்த வழக்குகளில் முன்னதாக இருவருக்கும் காசியாபாத் சிபிஐ நீதிமன்றம் மரண தண்டனை விதித்திருந்தது .
10 வழக்குகளில், சுரேந்திர கோலி பிரதான குற்றவாளியாகவும் இரண்டு வழக்குகளில் அவர் பாந்தருடன் சேர்ந்து குற்றம் சாட்டப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது .
பந்தர் விடுதலை பெறுவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், நிதாரி கொலைகள் தொடர்பான மற்றும் சில வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருவதால், கோலி சிறை தண்டனை தொடரும் என்று அவரது வழக்கறிஞர் மனிஷா பண்டாரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார் .
ஆதாரங்களை மதிப்பாய்வு செய்த பிறகு, குற்றம் சாட்டப்பட்டவரின் குற்றத்தை நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்க அரசுத் தவறிவிட்டது என்று நாங்கள் கருதுகிறோம் என்று நீதிபதிகள் அஸ்வனி குமார் மிஸ்ரா மற்றும் சையத் அஃப்தாப் ஹுசைன் ரிஸ்வி ஆகியோர் அடங்கிய அமர்வு நீதிபதிகள் , 2017-ம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட வழக்கில் கோலி மற்றும் பந்தேரை விடுவித்து தீர்ப்பளித்தது.
60 நாட்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்ட பிறகும் , குற்றம் சாட்டப்பட்டவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யாமல் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட விதம், சட்ட உதவி வழங்குதல், , பிரிவு 164 Cr.P.C யின் குறைந்தபட்ச தேவைகளுக்கு இணங்கத் தவறியது அதிர்ச்சி அளிப்பதாக அவர்களை விடுதலை செய்து அமர்வு நீதி மன்றம் தெரிவித்துள்ளது .
இந்த வழக்கு, 2006 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் காணாமல் போனதாகக் புகாரளிக்கப்பட்ட 20 வயதுப் பெண் பிணமாக மீட்கப்பட்டதை தொடர்ந்து இந்த வழக்கு தீவிரம் அடைந்தது . மேலும் இந்த வழக்கினில் தீவிர விசாரணை நடத்திய போலீசார் இதே போல் காணாமல் போன பெண்கள் குறித்து விசாரணை நடத்தினர் . இந்நிலையில் 2006 டிசம்பர் மாதம் டெல்லியை ஒட்டிய நிதாரி கிராமத்தில் உள்ள தொழிலதிபர் பாந்தரின் இல்லத்திற்கு வெளியே உள்ள சாக்கடையில் இருந்து காணாமல் போன சிறுமிகளின் எலும்புக்கூடுகள் மற்றும் உடைமைகள் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தக் கொலைகள் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
காணாமல் போன பெண்கள் தொடர்பான வழக்கை விசாரித்த போலீசார் ஆதாரம் கிடைத்ததாகக் கூறி, பாந்தரின் இல்லம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்தினர் .சந்தேகத்தின் பேரில் இருவரையும் கைது செய்த பின்னர், வாய்க்காலில் இருந்து மேலும் சில பெண்களின் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டதாக போலீசார் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது .