கோவையில் தங்கியிருந்த நைஜீரிய வாலிபர் கைது – காவல் நிலைய ஆய்வாளர் அர்ஜுன் குமார்..!

2 Min Read

கோயம்புத்தூர் குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனையில் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த எம்மா என்கிற இமானுவேல் என்பவர் மூச்சுத்திணறல் பிரச்சனைக்காக சேர்க்கப்பட்டு இருப்பதாகவும் அவர் முறையான பாஸ்போர்ட் மற்றும் விசா தகவல்களை தரவில்லை எனவும் காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் பெயரில் கடந்த தேதி நேரில் சென்று விசாரணை.

- Advertisement -
Ad imageAd image

மேலும், விசாரணை மேற்கொண்ட போது அவர் இந்தியாவிற்கு வந்தது பற்றியும் இந்தியாவில் தங்கி இருப்பது பற்றியும் மற்றும் அவருடைய பாஸ்போர்ட் மற்றும் விசா தொடர்பான தகவல்களை முறையான தகவல்களை தராததால் அவர் மீது C2 பந்தய சாலை காவல் நிலைய Cr no 39/24 u/s 14a,14A(b) foreigners act படி வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

நைஜீரிய நாட்டைச் சேர்ந்த எம்மாகோயம்புத்தூர் குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்

இதனை அடுத்து விசாரணையில் மேற்படி நபர் எம்மா என்கிற இம்மானுவேல் தந்தை பெயர் ஓக்கா உதம்பரா வில்லேஜ் ஈசியாளா டவுன் அனம்பரா மாவட்டம் நைஜீரியா என்றும் இவர் கடந்த பல வருடங்களாக மும்பையில் தனது நண்பர்களுடன் தங்கி இருந்தது தெரியவந்தது.

இந்த நிலையில், மும்பை மற்றும் தமிழ்நாடு வந்து திருப்பூர் மாநகரில் உள்ள பல இடங்களுக்கு சென்று துணிகளை மலிவு விலைக்கு வாங்கி இங்கிருந்து நைஜீரியாவிற்கு ஏற்றுமதி செய்து தொழில் செய்து வந்தது தெரிய வந்தது மேலும் இவர் வைத்திருந்த பாஸ்போர்ட் மற்றும் விசா பல வருடங்களுக்கு முன்பே காலாவதியானதும் சட்ட விரோதமாக இந்தியாவில் இவர் குடியிருப்பதும் தெரிய வந்தது.

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எம்மா

அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் கடந்த 22.1.2024 ஆம் தேதி சேர்க்கப்பட்டார். அரசு மருத்துவமனையில் சிகிச்சை முடித்து இன்று 27. 1. 2024-ம் தேதி மதியம் 2:30 மணியளவில் டிஸ்டார்ஜ் ஆகி வெளியே வந்தவரை C2பந்தய சாலை காவல் நிலைய ஆய்வாளர் அர்ஜுன் குமார் கைது செய்து நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு போதிய ஆவணங்கள் இல்லாமல் இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கி இருந்ததற்காக கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.

கோவை மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவின் பேரில் கோவை மாநகரில் இதுபோன்று முறையான பாஸ்போர்ட் மற்றும் விசா ஆவணங்கள் இல்லாமல் தங்கி உள்ள வெளிநாட்டவர்கள் குறிப்பான தகவல்களை திரட்டவும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a review