தமிழகத்தில் என்.ஐ.ஏ கண்காணிக்க வேண்டும் – காடேஸ்வரா சுப்பிரமணியம்..!

2 Min Read

தமிழகத்தில் தொடர்ந்து நிகழ்வு விபத்துக்கள் மற்றும் மிரட்டல்கள் குறித்து தேசிய புலனாய்வு முகமை என்.ஐ.ஏ தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.

- Advertisement -
Ad imageAd image

விமானத்தில் இருந்து இறங்கிய தஞ்சையை சேர்ந்த முகம்மது அசன் என்பவரை தேசிய பாதுகாப்பு முகமையை சேர்ந்த அதிகாரிகள் சோதனைக்காக அழைத்துச் சென்றனர். தொடர்ந்து அவரிடம் விமான நிலைய வளாகத்திலேயே தனி அறையில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பும் இதே போன்று வெளிநாட்டில் இருந்து வந்த பயணி ஒருவரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது. இந்தியா முழுவதிலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சமூக விரோத கும்பல்களுக்கு உடந்தையாக இருந்த பல்வேறு அமைப்புகள் தடை செய்யப்பட்டன. இதனை தொடர்ந்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நாடு முழுவதிலும் அந்த அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் வீடு மற்றும் அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

காடேஸ்வரா சுப்பிரமணியம்

இதன் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை; சென்னையில் சி.பி.சி.எல் நிறுவனத்தில் கசடு எண்ணெய் கசிவு கோரமண்டல் உர ஆலையில் அமோனியா வாயு கசிவு ஐ.ஓ.சி நிறுவனத்தில் எத்தனால் பேங்க் வெடிப்பு என அடுத்தடுத்து விபத்துக்கள் நடந்துள்ளன. இவை குறித்த முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும். கடந்த சில நாட்களாக தமிழகத்தில் இஸ்லாமிய மதவாத பயங்கரவாதம், இடதுசாரி பயங்கரவாதம் மீண்டும் தலை தூக்கும் தகவல்கள் வருகின்றன. குறிப்பாக தேனியில் நடந்த சோதனையில் கொடூர சதி செயல்கள் குறித்த தகவல் கிடைத்திருக்கிறது. சங்ககிரி போலீஸ் ஸ்டேஷனில் மர்ம பொருள் வெடித்தது. பி.ஜே.பி அலுவலகத்துக்கு தமிழகத்தில் 30 இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என்ற மிரட்டல் தகவல் வந்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் இன்று 10 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருக்கிறார்களா? என்கிற கோணத்தில் இந்த விசாரணை நடைபெற்று வருவதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

காடேஸ்வரா சுப்பிரமணியம்

இவற்றின் மூலம் மீண்டும் தமிழகத்தை பயங்கரவாத சக்திகள் குறி வைப்பதாக தெரிகிறது. இதுபோன்ற சம்பவங்களில் அடிப்படை நிகழ்வு மற்றும் உண்மையான சம்பவங்களை போலீசார் மூடி மறைக்கவே முயற்சிக்கின்றனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும் போலீசார் மற்றும் தேசிய புலனாய்வு முகமையினர் கண்காணிப்பு தீவிர படுத்த வேண்டும். மத்திய போலீஸ் உளவு அமைப்பு அதிகாரிகளும் சம்பவ இடத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். தழிழகத்தில் தேசிய புலனாய்வு முகமை என்று அழைக்கப்படும் என்.ஐ.ஏ. குழுவின் அதிகாரிகள் தொடர்ச்சியாக கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

 

Share This Article
Leave a review