புதுச்சேரி, முத்தியால்பேட்டை சோலை நகரை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் வயது (57). இவர் ஆசாரி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கற்பகம். இவர்களுக்கு சவுமியா வயது (27), ரம்யா வயது (22) ஆகிய இரண்டு மகள்கள்.
இதனிடையே கற்பகம் இவரை விட்டு பிரிந்து சென்று விட்டதால் இரண்டாவதாக பொற்கலை என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு நிவேதா வயது (18) என்ற மகள் உள்ளார். அப்போது சவுமியா திருமணமாகி சென்று விட்டார்.

அப்போது ரம்யா அதேபகுதியை சேர்ந்த தமிழ்மணி வயது (25) என்பவரை காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த ஜனவரி 22-ம் தேதி திருமணம் செய்து கொண்டார். இதனிடையே ரம்யாவுக்கும், தமிழ்மணிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்துள்ளது.
இதனால் ரம்யா கோபித்துக்கொண்டு தனது தாய் வீட்டுக்கு வந்து விடுவார். அப்போது பன்னீர்செல்வம் சமாதானம் பேசி அவரது கணவர் வீட்டிற்கு அழைத்து செல்வார். இதனிடையே கடந்த 24-ம் தேதி தமிழ்மணி பன்னீர்செல்வத்துக்கு போன் செய்து ரம்யாவை அழைத்து செல்லுங்கள் என்று கூறியுள்ளார்.

அப்போது உடனே பன்னீர்செல்வம் தனது மகள் ரம்யாவை வீட்டுக்கு அழைத்து சென்று விட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் பன்னீர்செல்வம், பொற்கலை இருவரும் வேலைக்கு சென்று விட்டனர். நிவேதா கல்லூரிக்கு சென்று விட்டார்.
இந்த நிலையில், மதியம் 12.40 மணி அளவில் நிவேதா தனது தந்தை பன்னீர்செல்வத்துக்கு போன் செய்து ரம்யா தூக்கில் தொங்குவதாக கூறியுள்ளார். அப்போது உடனே பன்னீர்செல்வம் வீட்டுக்கு வந்து பார்த்த போது ரம்யா தனது தாயார் புடவையால் இரும்பு பைப்பில் தூக்கு போட்டு கொண்டது தெரியவந்தது.

இதை அடுத்து அவரை மீட்டு புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பன்னீர்செல்வம் முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அப்போது முதற்கட்ட விசாரணையில், ரம்யா தனது அக்கா சவுமியாவிடம் எனக்கு வாழ பிடிக்கவில்லை என செல்போன் மூலம் மெசேஜ் அனுப்பியுள்ளார். பிறகு சவுமியா பக்கத்து வீட்டுக்கு போன் செய்து ரம்யாவை பார்க்குமாறு கூறியுள்ளார்.

அப்போது உடனே பக்கத்து வீட்டுக்காரர் சென்று பார்த்த போது கதவு உள்பக்கமாக தாழ்ப்பாள் போடபட்டிருந்தது. பின்னர் ஜன்னல் வழியாக பார்த்த போது ரம்யா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
பின்பு திருமணமாகி 2 மாதங்களே ஆவதால் தாசில்தார் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.