நடிகர் தனுஷும், அவரின் மனைவியான ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் சேர்ந்து துவங்கிய தயாரிப்பு நிறுவனம் பெயர் தான் வுண்டர்பார் ஃபிலிம்ஸ்.
வுண்டர்பார் தயாரிப்பில் வெளியான முதல் படம் தனுஷ் நடித்து அவர் மனைவி தயாரித்த ‘3’ படம். இதையடுத்து சிவகார்த்திகேயனின் எதிர்நீச்சல் படத்தை தயாரித்தது வுண்டர்பார்.
தொடர்ந்து தனுஷின் வேலையில்லாத பட்டதாரி, ஷமிதாப், காக்கி சட்டை, காக்கா முட்டை, மாரி, நானும் ரௌடி தான், தங்கமகன், விசாரணை, அம்மா கணக்கு, சினிமா வீரன், ப. பாண்டி, விஐபி2, தரங்கம், வட சென்னை, காலா, மாரி 2 ஆகிய பல படங்கள் வுண்டர்பார் தயாரிப்பில் வெளியான படங்கள் தான்.
2018ம் ஆண்டு வெளியான மாரி 2 படத்தை அடுத்து வுண்டர்பார் தயாரிப்பில் இந்தாண்டு வரை எந்த படமும் வெளியாகவில்லை அதற்க்கான அறிவிப்பும் வரவில்லை. வுண்டர்பார் தயாரிப்பு நிறுவனத்தை இழுத்து மூடிவிட்டார் தனுஷ் என்று பரவலாக பேசப்பட்டது.

இந்நிலையில் தான் மாரி செல்வராஜ் இயக்கத்தில் மீண்டும் நடிக்கிறார் தனுஷ். அந்த படத்தை தன் வுண்டர்பார் நிறுவனம் மூலம் தயாரிக்கப் போகிறார் என அண்மையில் தகவல் வெளியானது.
அந்த தகவல் உண்மை என்பது வுண்டர்பார் நிறுவனத்தின் ட்வீட் மூலம் தெரிய வந்துள்ளது. இன்று இரவு 7. 30 மணிக்கு அறிவிப்பு வரும் என ஒரு போஸ்ட்டுடன் வுண்டர்பார் நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த ட்வீட்டை பார்த்த தனுஷ் ரசிகர்களால் சந்தோஷத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. வெல்கம் பேக் என கமெண்டுகளை அள்ளித் தெளித்து வருகின்றனர். தனுஷ், மாரிசெல்வராஜ் படம் குறித்த அறிவிப்பு தானே. நாங்கள் மரண மாஸ் வெயிட்டிங் என்கிறார்கள்.
ரொம்ப சந்தோஷமாக இருக்கு. வுண்டர்பார் இஸ் பேக். வடசென்னை 2 படம் குறித்த அறிவிப்பா? இந்த பக்கத்தில் இப்படி ஒரு ட்வீட்டை பார்த்து ரொம்ப காலம் ஆச்சு. விக்னேஷ் சிவன் படமா? விஐபி 3 படம் வருதோ? என கமெண்ட் மாஇ பொழிந்து வருகின்றனர் .

வுண்டர்பார் நிறுவனத்தை ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து துவங்கிய போதிலும் அதன் உரிமையாளர் தனுஷ் தான். அதனால் படம் தயாரிப்பது என்று அவரால் தனியாக முடிவு எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். அதன் பிறகு சேகர் கம்முலா இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். சேகர் கம்முலா பட வேலையை முடித்த பிறகு ஒரு படத்தை இயக்கவிருக்கிறார். இந்த வேலையை எல்லாம் முடித்துவிட்டு தான் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கிறாராம்.
முன்னதாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த கர்ணன் படம் சூப்பர் ஹிட்டாகி பட்டித் தொட்டியெங்கும் கொண்டாடப்பட்டது அனைவரும் அறிந்த ஒன்றே. இதையடுத்தே அந்த வெற்றிக் கூட்டணி மீண்டும் சேர்கிறது. அதனால் இந்த படமும் சூப்பர் ஹிட்டாகும் என்பதில் படக்குழுவினருக்கு சந்தேகமே இல்லை.

பிரிந்து வாழும் தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் ஓரிரு ஆண்டுகள் கழித்து மீண்டும் சேர்ந்து வாழ முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்நிலையில் வுண்டர்பார் நிறுவனம் மீண்டும் படம் தயாரிக்கவிருக்கிறது. ஒரே நாளில் இரண்டு குட் நியூஸ் வந்ததால் தனுஷ் ரசிகர்களை கையில் பிடிக்க முடியவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கிறது என்று.