திருவள்ளூரில் பிறந்து 10 நாட்களே ஆன ஆண் குழந்தை கோவில் குளத்தின் அருகே சாலையோரத்தில் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் நகரக பகுதியில் அமைந்துள்ள வீரராகவர் கோயில் குளத்தின் அருகே சாலையோரத்தில் ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்பதை கண்ட அந்த வழியாக சென்றவர்கள் சாலையோரத்தில் சென்று பார்த்தபோது, பிறந்து பத்து நாட்களே ஆன ஆண் குழந்தை ஒன்று கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதனையடுத்து அந்த குழந்தையை பார்க்க ஏராளமானோர் திரண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து திருவள்ளூர் நகர காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் நகர காவல் நிலைய உதவி ஆய்வாளர் சீனிவாசன் மற்றும் பார்த்திபன் ஆகியோர் விரைந்து வந்து அந்த குழந்தையை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் குழந்தையை பரிசோதித்து சிகிச்சை அளித்தனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையை வீசி சென்ற கல்நெஞ்சம் படைத்த தாய் யார்? குழந்தையை யாராவது கடத்தி வந்து வீசி சென்றார்களா? அல்லது தவறான உறவு முறையால் குழந்தை பிறந்ததால் வீசி சென்றார்களா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
10 நாட்களே ஆன ஆண் குழந்தை கோவில் குளத்தின் அருகே சாலையோரத்தில் வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தை வரம் வேண்டும் என தம்பதியினர் பலர் குடும்பத்தோடு கோவில் குளம் சென்று வழிபாடு செய்துக்கொண்டு இருக்கும்
இந்த காலகட்டத்திலும் கோவில் குளத்தின் அருகிலேயே குழந்தையை வீசி சென்றவர்களுக்கு என்ன தெரிய போகிறது அதனின் அருமை..