மணலை கொள்ளையடிப்பவர்கள், மலையை உடைத்து சுரண்டுகிறவர்கள், தண்ணீரை கொள்ளை அடிக்கிறவர்கள் அரசியல்வாதிகளாக இருக்கிறார்கள். விழுப்புரத்தில் இயக்குநர் மு களஞ்சியம் பேச்சு.
நாம் தமிழர் கட்சியின் சார்பில் விழுப்புரம் பாராளுமன்ற தொகுதியின் போட்டியிடும் வேட்பாளர் இயக்குநர் மு களஞ்சியம் விழுப்புரம் நகர் பகுதியில் பல்வேறு இடங்களில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.விழுப்புரம் நகரின் பல பகுதிகளுக்கு நேரில் சென்று பொது மக்களிடையே வாக்கு சேகரித்தார். இறுதியில் விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் முன்பாக பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. பொதுக்கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சியின் விழுப்புரம் நாடாளுமன்ற வேட்பாளர் இயக்குநர் மு களஞ்சியம். சீமான் அறிவித்திருக்கும் தமிழ்நாடு புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களில் 16 பேர் மருத்துவர்கள். 10 பேர் பொறியாளர்கள் என்றார்.விவசாயியாக இருந்தாலும் பட்டதாரிகளை தேர்தலில் போட்டியிட செய்யும் கட்சி நாம் தமிழர் கட்சி.
நாம் தமிழர் கட்சி மண்ணையும் மக்களையும் நேசிக்கிற ஒரு கட்சி. அரசியல் என்று சொன்னால் தீண்டத்தகாத பொருள் போல ஒதுங்கியிருக்கிறார்கள். தமிழகத்தில் மணல் கொள்ளை, மலைகள் சுரண்டல், தண்ணீர் கொள்ளையடிக்கிறவர்கள் பெரும்பாலும் அரசியல்வாதிகளாகவே இருக்கிறார்கள். ஜனநாயக அதிகாரம் மிக்கவர்கள் மக்கள்.அந்தாதிகாரம் எதுவரை மக்களுக்கு இருக்கிறது என்றால் தேர்தலில் வாக்குச்சாவடிக்கு செல்லும் வரை தான் அதிகாரம் இருக்கிறது.ஓட்டு போட்டவுடன் அந்த அதிகாரம் பறிக்கப்படுகிறது. தமிழகத்தில் படிக்கிற படித்த இளைஞர்கள் பெங்களூர் மும்பை என வேலை தேடி செல்லுகிறார்கள். அதற்கான ஒரு கட்டமைப்பை அந்தந்த பகுதியில் ஏற்படுத்த தவறி விட்டார்கள் அரசியல்வாதிகள்.
தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே உடைந்து போன தடுப்பணைகளை இது வரை கட்ட வில்லை இந்த அரசியல்வாதிகள்.நாம் தமிழர் கட்சி ஓட்டுக்கு காசு கொடுக்காது. நாம் தமிழர் கட்சி வெற்றி பெற்றால் ஒரு ஆண்டுக்கு ஆயிரம் இளைஞர்களை அரசு வேலைக்கு அனுப்புகிற தேர்வுகளில் பங்கெடுக்க செய்யும். அண்ணா, கலைஞர் சொன்ன கொள்கைகள், தத்துவத்தை ஸ்டாலின் கடைபிடிக்கிறாரா?இல்லை. நாம் தமிழர் கட்சி தொடர்ந்து ஏழாவது தேர்தலை சந்தித்து வருகிறது. இறுதியாக நடந்த தேர்தலில் ஏழு சதவீதம் வாக்குகளை பெற்றது.இது வரை தனித்து தான் போட்டியிட்டது.மக்கள் நலனுக்காக தொடர்ந்து பாடுபடும் கட்சி நாம் தமிழர் கட்சி எனக்கு வாக்களித்தால் இந்த மக்களின் தேவைகளை அறிந்து அவற்றை பூர்த்தி செய்தேன் என்று பேசினார்.