கரூரில் அரசு பள்ளி மாணவிகள் 3 பேர் மாயமான நிலையில் அவர்கள் ரயில் நிலையத்தில் சென்ற சி.சி.டி.வி வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கரூர் அருகே அரசு பள்ளி மாணவிகள் 3 பேர் மாயமான சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கரூர் மாவட்டம் அடுத்த ராயனூர் பகுதியில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வந்த மூன்று மாணவிகள் திடிரேன்று நேற்று காலை வீட்டில் இருந்து தினமும் வழக்கம் போல் மாணவிகள் பள்ளிக்கு புறப்பட்டுள்ளனர். ஆனால், வீட்டில் இருந்து புறப்பட்ட மாணவிகள் பள்ளிக்கு செல்லாமல் வேறோரு இடத்திற்கு சென்ற மாணவிகள், பள்ளிக்கு அருகே சென்று மூன்று மாணவிகள் ஒன்று கூடி வெளியே சென்று மாயமாகி விட்டனர். இந்த நிலையில் 3 பள்ளி மாணவிகள் பள்ளிக்கு வராததால் பள்ளி ஆசிரியர்கள் பெற்றோரிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் தெரிந்தவர்களிடம் கூறி பல்வேறு இடங்களில் மணவிகளை தேடியுள்ளனர். ஆனால் பெற்றோர்கள் நீண்ட நேரம் பலவேறு இடங்களில் தேடியும் மாணவிகள் கிடைக்காத காரணத்தால், பெற்றோர் சென்று தாந்தோணிமலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். பெற்றோர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் போலீசார் 2 தனிப்படைகள் அமைத்து காணமல் போன 3 மாணவிகளை தேடி வருகின்றனர். இந்த நிலையில் போலீசார் முதற்கட்ட விசாரணையில் பேருந்து மூலம் மாணவிகள் பயணம் செய்துள்ளனர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

பின்னர் தற்போது அந்த மூன்று பள்ளி மாணவிகளும் கரூர் ரயில் நிலையத்தில் முகத்தில் மாஸ் அணிந்து பேக் எடுத்து செல்லும் சி.சி.டி.வி வீடியோ காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனால் குறிப்பாக காணாமல் போன மூன்று சிறுமிகளின் நோட்டுப் புத்தகங்களில் கொரியா மொழியால் எழுதப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளது. மேலும், அருகில் உள்ள மாவட்ட எல்லையில் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் ஆய்வாளர் தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.